Wednesday, 28 April 2021

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 28 2021

 நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 28 2021 


2030 க்குள் 50 மில்லியன் உயிர்களை காப்பாற்ற உலகளாவிய நோய் தடுப்பு மூலத்தை அறிவிக்க போவதாக WHO அறிவித்துள்ளது .


இங்கிலாந்தில் உலகின் மிக சக்தி வாய்ந்த காலநிலை மாற்றத்தை அறிவிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் தயாராகி வருகிறது . இது மைக்ரோ சாஃப்ட் நிறுவனமும் , UK வானிலை அமைப்பும் இணைந்து தயாரித்து வருகினறன .


வில்வித்தை உலகக் கோப்பை போட்டி அமெரிக்காவில் குவாத்தமாலா நகரத்தில் நடக்கிறது .  3 தங்க பதக்கங்களை இந்திய அணி பெற்று தந்துள்ளனர் தீபிகா குமாரி , அங்கிதா பகத், கோமாளிக பாரி ஆகிய மூவரும் ! இதில் மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வெல்கிறார் தீபிகா குமாரி .

கலப்பு இரட்டையர் பிரிவில் அதானு தாஸ் மற்றும் அங்கீத பகத் இருவரும் இணைந்து வெண்கல பதக்கம் வென்றுள்ளனர் .

இந்த வெற்றியின் மூலம் அதானு தாஸ் டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட தேர்வாகி உள்ளார் .

அதானு தாஸ் மற்றும் தீபிகா குமாரி இருவரும் தம்பதியர் என்பது குறிப்பிடத்தக்கது .


ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் வெளியுறவு தணிக்கையாளராக திரு .கிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார் .


சென்னையில் காரோண சிகிக்சையை கண்காணிக்க திரு தரேஸ் அகமது IAS அவர்கள் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் . முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளை இவர் கண்காணிப்பார் . மேலும் கொரோன சிகிச்சைக்காக ஒப்பந்த அடிப்படியில் 150 மருத்துவர்களும் 1560 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் .


இந்திய மற்றும் பிரெஞ்சு கடற்படை இரு தரப்பு பயிற்சியாக வருணா 21 பயிற்சி 19 வது பயிற்சியாக அரபி கடலில் ஏப்ரல் 25 முதல் 27 வரை நடைபெற்று முடிந்தது .


2022 ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பேர்கிங்கம் நகரில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் T 20 நடைபெற உள்ளது . இதில் இந்திய அணியும் பங்கு பெற உள்ளது . இந்த காமென்வெல்த் போட்டிகளில் மொத்தம் 72 நாடுகளை சேர்ந்த 4500 பேர் பங்கு பெற உள்ளனர் . ஜூலை 28 - ஆகஸ்ட் 8 2022 ல் நடைபெற உள்ளது.



உலக ஆற்றல் மாற்ற பட்டியலை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 115 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 87 வது இடம் பிடித்துள்ளது. முதல் 5 இடங்கள் பின்வருமாறு : ஸ்வீடன், நார்வே, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா . கடைசி இடம் ஜிம்பாபவே !


UNICEF நல்லெண்ண தூதர் திரு .டேவிட் பெக்காம் உலகளாவிய தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்து செல்ல விழிப்புணர்ச்சி செய்கிறார் .


இங்கிலாந்தில் நடைபெறும் லீக் கால்பந்து போட்டிகளில் மான்சேஸ்டெர் அணி வெற்றி பெற்றுள்ளது .



Living Mountain என்ற நூலை ஞான பீட விருது எழுத்தாளர் திரு .அமிதவ் கோஷ் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார் . இது நடப்பு கால உலகளாவிய பரவல் தொடர்பாக எழுதப்பட்டது .



Whereabouts என்ற நூலை ஜும்பா லாஹரி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் . இது ஏற்கெனவே இவரே இத்தாலி மொழியில் எழுதிய நாவல் ஆகும் .



No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...