கடந்த 8 ம் தேதி தொடங்கி ( 20.11.2015 )
இப்போது தான் சற்று ஓய்வெடுக்கிறது மழை !
அதற்குள்ளாக லக்ஷத்தீவில் குறைந்த காற்றழுத்த மண்டலம் . அடுத்த 20 நாட்களுக்கு மழை பெய்யும் என்று கூறுகிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
ஊரை சுற்றிலும் நீர் !
ஆனால்
குடிக்க நீர் இல்லை !
குளிக்க நீர் இல்லை !
குப்பைகாளால் நிறைந்திருக்கிறது !
குமட்டும் வாசனைகலோடு !
குடிசளும் மிதக்கின்றன !
கும்மாளம் மிட்ட கார்களும் மிதக்கின்றன !
மனிதனுக்குத்தான் வேறுபாடுகள் !
மனிதனுக்குள் வேறுபாடுகள் பார்க்க தெரியாது எனக்கு !
என்று சொல்லாமல் சொல்லும் வெள்ளம் !
இத்தனைக்கும் இடையில் நடிகர் சங்கம் ஒரு நாடகம் போடுகிறது.
பொம்மை தலைவர் நாசர் தலைமையில் உண்மை தலைவர் விஷால் கூறுகிறார் நடிகர் சங்கம் தமிழ்நாட்டின் பிரச்சனைகளில் ஈடுபடாது என்று !
பிறகு எந்த நாட்டின் பிரச்சனைகளில் ஈடுபடும் .
ஓ ! அவர்களுக்கெல்லாம் வேறு வேறு நாடுகள் உள்ளன என்று அவர்களும் சொல்லாமல் சொல்லுகின்றனர்.
அதற்க்கு பதிலும் தருகிறார் விஷால் , எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை பார்த்து கொள்ள அரசு இருக்கிறது என்று .
உண்மை என்று ஒரு கூட்டம் ஒப்புதல் அளிக்கிறது .
ஒப்பு கொள்கிறோம். இது உங்கள் வேலை இல்லை தான் .
ஆனால் தமிழ்நாட்டின் அரசு பள்ளி ஆசிரியர்கள் எல்லாம் ஒரு நாள் ஊதியத்தை வெள்ள நிவாரணத்திற்காக கொடுத்தனர் .
அவர்களுக்கு தெரியாதா இது அரசின் வேலை என்று.
சி.ஐ.டி .யு ஊழி யர்கலெல்லாம் ஒரு நாள் ஊதியத்தை நிவாரணமாக கொடுத்தனர் .
அவர்களுக்கு தெரியாத இது அரசின் வேலை என்று
ஆட்டோ காரர்களும், இன்னும் எத்தனை எத்தனையோ தமிழ் நெஞ்சங்கள் உழைத்து கொண்டு இருக்கின்றனர் .
அவர்கள் யாருக்கும் தெரியாது இது அரசின் வேலை என்று.
எங்கே அந்த த்ரிஷா , ஒ ! நாய்களுக்காகத்தான் அவர் பேசுவாரோ ?
எங்கே அந்த குஷ்பூ . ஒ !அடுத்த முதல்வர் என்று கனவில் இருக்கிறாரா ?
கோவை சரளாவும், கருணாசும் தமிழ் நாட்டவர்கள் தானே!
ஒ ! விஷால் பின்னால் ஒளிந்து இருக்கிறார்களா?
எங்கே நம்ம சூரியாவும் , கார்த்திக்கும் , அவர்கள் ஆந்திராவிற்கு மட்டும்தான் உதவி செய்வார்களா ?
அங்கெல்லாம் அரசு எந்த வேலையும் பார்ப்பது இல்லையோ ?
உங்களை எல்லாம் எவர்கேட்டார் உதவி .
ஒவ்வொரு படம் வெளி வரும் போதும் , ஆண்டவன் சொன்னால் நான் முதல்வராவேன் என்று கூறிக்கொண்டு இருப்பது உங்கள் வேலையா ?
புலி படத்தின் கதாநாயகனின் கடைசி வசனம் இது :
நான் உங்களுக்காக தலைவன் ஆவேன் ! என்று . இது உங்கள் வேலையா ?
வரலாறுகளை புரட்டினால் நடிகர் எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்
நடிகை ஜெயலலிதா முதல்வர் ஆனார்
திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி முதல்வர் ஆனார்
இன்னும் இப்போட்டியில் விஜயகாந்த் நிற்கிறார் .
ஏன் நடிகர் சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கினார்.
நடிகர் கார்த்திக் அகில இந்திய நாடாளும் கட்சி தலைவரானார்
நடிகர் சீமான் நாம் தமிழர் கட்சி மூலம் கத்தி கதறுகிறார் .
நடிகர் டி ..ராஜேந்தர் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் கட்சி தொடங்கினார்
இன்னுமும் நடிகர் விஜய் நான் அம்பானி ஆவேன் நான் அம்பானி ஆவேன் என்று கூறி கொண்டே இருக்கிறார் .
நடிகர் விஷாலும், நடிகர் சிம்பும் கூட இந்த ஓட்டபந்தயத்தில் ஓடி வரலாம் .
தவறில்லை .
இதெல்லாம் உங்கள் வேலையா ?
எதை பயன்படுத்தி கட்சி தொடங்குகிறீர்கள் .
நீங்களெல்லாம் மக்களுக்கு எப்படி அறிமுகமாகிறீர்கள் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் .
எதோ நாட்டிற்கு சேவை செய்து மக்களிடம் நற்பெயர் எடுக்க வில்லை .
ஸ்டைல் செய்யவது எப்படி என்று செய்து காட்டுவது சேவையா ?
திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக வாழ்வது எப்படி என்று வாழ்ந்து காட்டுவது சேவையா ?
உங்கள் திரைப்படங்களில் எல்லாம் எதோ நடப்பதை எல்லாம் அப்படியே செய்து காட்டுகிறோம் என்ற பெயரில் ஊரில் ஒரு மூலையில் உள்ள குப்பையை அள்ளி ஊரெல்லாம் கொட்டுவது போல் எங்கோ நடந்த ஒரு கொலையை கூட எப்படி செய்வது என்று விலாவரியாக காட்டுவது சேவையா?
போலியான வாழ்கையை கற்று கொடுத்தது சேவையா?
பெண்களுக்கு தவறான வாழ்கை முறைகளை கற்று கொடுக்கிக்ரீர்களே !அது சேவையா?
உங்களை சொல்லி குற்றமில்லை . உங்கள் மூஞ்சி எல்லாம் காட்டி காட்டி தமிழ் மக்களை ஏமாற்றியது ஊடகங்கள்.
ஊடகமெல்லாம் நம்மை காட்டுகிறதே என்று ஏரியை எல்லாம் மூடி எவனோ ஒருவன் போட்ட மனைகெல்லாம் விளம்பரம் செய்து காசு பார்த்தீர்களே அதுவும் செவைதானோ ?
இத்தனை மழை வெள்ளத்திலும் வடிவுக்கரசி கொடுக்கும் மனை விளம்பரமும், நிழல்கள் ரவியின் விளம்பரமும் விடாமல் வந்து மனிமங்கலத்தை வாங்கிகங்க என்று கூறும்போது தான் தெரிகிறது . மழையிலும் , புயலிலும் உங்கள் சேவை தொடர்கிறது என்று.!
நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள் !
எல்லா நடிகர்களும்தான் மக்களை பார்த்து எங்களை வாழவைக்கும் தெய்வங்களே ! என்று பேசுகிறீர்கள் .
உங்களுக்கு மக்கள்தான் தெய்வம்
மக்களுக்கு ஒருபோதும் நீங்கள் தெய்வமாக முடியாது !
கேவலம்!
நாவடக்கம் இல்லாமல் போனதால் சரத்குமார் நடிகர்சங்க தேர்தலில் தோற்று போனார் .
நாவடக்கம் இல்லாமல் , எதோ தமிழ்நாடு உங்கள் காலடியில் இருப்பது போல் , உங்களை கெஞ்சி கொண்டு இருப்பது போல் எண்ணி நீங்கள் கூறிய வார்த்தைகள் உங்கள் சினிமா துறையையே அழிக்கும் .
1757 ம் ஆண்டு முதன்முதலில் வெள்ளையனிடம் அடிமை ஆகியது .
1857 ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திர போர் ஏற்பட்டது .
இது தான் இந்திய சுதந்திரத்தின் அடிப்படை .
1916 ம் ஆண்டு கீசகவதம் என்ற திரைபடத்தின் மூலம் நடிகர்கள் ஆள தொடங்கினர் .
2016 ம் ஆண்டு முதல் இந்நிலை முடிவுக்கு வர போகிறது .
ஒரு வகையில் விஷாலுக்கு நன்றி . சினிமா உலகை எதிர்க்க அஸ்திவாரம் போட்டதற்கு !
ஊடகங்களே .! இது உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கிறோம் .
எவனிடமாவது தமிழகதிற்கு அதை செய்வீர்களா இதை செய்வீர்களா என்று பிச்சை கேட்டு உங்கள் பக்கத்தையும் , வயிற்றையும் நிரப்ப மக்களை அவமான படுத்தாதீர் .!
இங்கு எவனும் பிச்சைகாரன் அல்ல .
வந்தாரை வாழ வைத்த தமிழகத்திற்கு வாழவும் தெரியும் .