சினிமா நமக்கு சொல்லி தரும் கற்பிதங்கள் :
வியாபாரத்தில் ஈடுபடுபவன் பாவ, புண்ணியம் பார்க்க கூடாது. லாப, நஷ்டம் மட்டுமே பார்க்க வேண்டும் .
கம்பும் , கேழ்வரகும் உண்பவன் ஏழை அரிசி சாதம் உண்பவன் பணக்காரன் . இந்த காட்சி பழைய திரைப்படங்கள் எல்லா வற்றிலும் வருகிறது. அதன் விளைவுதான் இன்று நம் நாட்டின் பாரம்பரிய தானியங்களை இழந்தோம் .
படித்தவன் தவறுகளை தவறு இல்லாமல் செய்யலாம் .
சிகரெட் பிடிக்கலாம் . அதையும் ஸ்டைலாக செய்ய கற்று கொடுத்து இன்று நாடு முழுக்க கான்செர் நோயாளிககளை உருவாக்கி விட்ட பெருமை சினிமாவையே சேரும்.
ஆப்பிள் உண்பவன் உயர்தவன் . இதை ஒரு சிறுவனோ , சிறுமியோ பார்த்தவுடன் background மியூசிக் மிக சோகமாக இழைந்தோடும். இதே சூழ்நிலையில் இருப்பவர்கள் தன்னை தானே , தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படுத்தி கொள்வர் .
ஆப்பிள் அப்படி ஒன்றும் உயர்வான பழம் இல்லை.
கதாநாயகன் திருடலாம், ஒரு பெண்ணை வம்பிலுக்கலாம் , அதை நாம் பார்த்து ரசித்து , சிரித்து கொண்டே நகைசுவையாக எடுத்து கொள்ள வேண்டும் .
வில்லன் என்று காட்டப்படுபவர் தவறு செய்தவுடன் பொங்கி எழுந்து அவரை அடிக்கிறார் ஹீரோ .
முதல் காட்சி வரை தவறு செய்த ஹீரோ , அடுத்தவனை தட்டி கேட்க்கும் அளவுக்கு யோக்கியனா ?
நானும் பாக்குறேன் எல்லா படத்துலேயும் இந்த ஹீரோயினி எல்லாம் மேல துப்பட்டான்னு ஒன்னு போடாமத்தான் வர்றாங்க. ஒரு சீன் ல துப்பட்ட போடுறதும் , அதை வில்லன் இழுக்குறதும் ,அன்னைக்குத்தான் அந்த பொண்ணுக்கு கற்பு பறிபோன மாதிரி ஹீரோ காப்பாதுறதும் ,முடியல போங்க.
அப்புறம் பாவம் இந்த காமெடியன்கள் . இவர்களுக்கு ஒரே ஒரு வேலைதான் .படம் முழுக்க ஹீரோ பற்றி புகழ்ந்து பேச வேண்டும் . மிக கொடுமை இது . நடைமுறை வாழ்கையில் கொஞ்சம் கூட பொருந்தாத இந்த புகழ்ச்சியை எப்படித்தான் செய்கிறார்களோ .? ஆனால் இந்த காமெடியன்கள் தான் மக்களின் வில்லன்கள் . இவர்கள் புகழ்ந்து புகழ்ந்து, ஒரு நடிகனை , மக்களுக்கு தலைவன் ஆக்குகிறார்கள் . இது இவர்கள் வேலையா ?
No comments:
Post a Comment