Monday, 16 November 2015

சென்னையில் கடும்மழை 2015 நவம்பர் 16

                           சென்னையை அடித்து நொறுக்கும் கனமழை -

                            மழை நீரில் புதைந்தது சிங்கார சென்னை

இது தாங்க பத்திரிகைகளின் தலையங்கம் . எப்புடி நல்லா இருக்குதுள்ள !

                            ஐப்பசியில் அடைமழை 

                            கார்த்திகையில் கனமழை 

 
நம் பாட்டனும் , பூட்டனும் நமக்கு விட்டு போன அறிவியல் .
 
கற்க மறந்தது நாம்.
 
கற்பிக்க கூடாது என மறைத்தது நமது அரசு .
 
பாவம் என்ன செய்வர் நம் தலைவர்கள் 
 
அவர்களுக்கு தெரியாது இப்படி ஒரு அறிவியலை தமிழன் வளர்த்து வந்தானென்று .
 
ஏனெனில் அவர்கள் யாரும் தமிழர்கள் இல்லை. அவர்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை எப்படி அவர்கள் கல்விசாலையில் கொடுக்க முயல்வர்.
 
இது அவர்கள் தவறு இல்லை. தமிழனின் தவறு.
 
ஆனால் இன்றும் தமிழன் வள்ளுவரை மட்டும் மறப்பதே இல்லை.
 
 

ஆம்.வெள்ளக்காடாய் உள்ளது சென்னை . " இடுக்கண் வருங்கால் நகுக '' என்னும் திருக்குறளுக்கு  ஏற்ப அனைத்தையும் இன்பமாய் பார்கிறான். உடலில் ஊறிய தமிழ் ரத்தம் அனைத்தையும் நகைசுவை போல் பார்க்க சொல்கிறது.

 
 
 
 
இது போன்று படங்கள் வெளி இட்டு சந்தோஷ படுகிறார்கள்.
 
 
சென்னை ஜி.எஸ்.டி சாலையில் படகு போக்குவரத்து .
அங்கும் நகைசுவை வசனங்கள் 
 

                                ஓடமும் ஒருநாள் சாலையில் செல்லும்.

                                 சாலையில், நிறைந்த நீரில் பேருந்தும் படகு போல் செல்லும்.

 

 
பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை . ஒரு சில அலுவலகங்களும் விடுமுறையில் உள்ளன.
 
ஆனால் இந்த நிலையிலும் பணியாற்றி கொண்டிருக்கும் காவல்துறை, போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனைவரும் பாராட்டுதலுக்கும், அனைவரின் வேண்டுதல்களுக்கும் உட்பட்டு உள்ளனர். 
 
  
இதோ இந்த ஆட்டோகாரர்களும் பாராட்டுபெரும் இடத்திற்கு வந்து விடுகிறனர் .அவசர தேவைகளுக்கு இவர்களின் சேவையும் முக்கிய இடம் பிடிக்கிறது .
 
சாலை பணியாளர்கள் , துப்புரவு பணியாளர்கள் , மின்சார ஊழியர்கள் , தொலைபேசி ஊழியர்கள் ஆகிய இவர்களின் சேவையும் அதிக தேவையாய் உள்ளது.
 
 
இது போன்று அபாய குறிப்புடன் உள்ள பள்ளங்களும் உள்ளன. கண்டுபிடிக்கமுடியாமல் பேருந்துகளை கவிழ்க்க முயலும் பள்ளங்களும் உள்ளன .  ஒரு பேருந்து தி.நகர் அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மூழ்கியது . ஒரு நாள் முழுவதும் போராடி மூழ்கிய பேருந்து மீட்கப்பட்டது
 
 
இந்நிலையில் இவ்வளவு மழைநீரையும் சேமிக்காமல் விட்டுவிட்டு பிற மாநிலங்களில் தண்ணீர் பிச்சை கேட்கும் அவல நிலையில் இருந்து விடுபட முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகராய் பணியாற்றிய பொன்ராஜ் அவர்கள் சிங்கப்பூரில் மழைநீர் சேமிக்கும் முறை பற்றி குறிபிடுகிறார் .
 

வீட்டிலிருந்து மழைநீர் சேகரிக்கப்பட்டு, அது தெருவில் இருக்கும் கால்வாயில் கலக்கிறது. அதற்காக சாக்கடை கலக்காத மழைநீர் சேகரிப்புக்கு என்றே தனி வாய்க்கால் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக சாலைகளையொட்டி பிரமாண்டமான வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளன. சாலைகளில் சேரும் மழை நீர் கால்வாயில் சேகரிக்கப்பட்டு, முறையாக குளங்கள், ஏரிகளில் சென்று சேர்கிறது. என்று கூறுகிறார் .

இத்துடன்  ராக்கெட் செய்ய தெரிந்த நமக்கு இந்நீரை பாதுகாக்க தெரியாதா என்ற கேள்வியையும்  நம்மிடம் கொடுக்கிறார்.
 
 கடந்த ஒரு வாரகாலமாக மழை கொட்டி தீர்த்து , ஒரு வழியாக ஓயபோகும் நிலையில் தமிழ்நாட்டிற்கென்று ஒரு முதல்வர் இருக்கிறார் என்பதை நினைஊட்டும் வகையில், 
 ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு ஜெயலலிதா நேரில் ஆறுதல்! என்று செய்தி வெளியிடுகிறது பத்திரிகை . நாள் முழுவதும் இந்த செய்தியையே தருகிறது ஜெயா செய்தி ஊடகங்கள் .
 
போட்டிக்கு தி.மு.க. செய்தி ஊடகங்களும் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு ஆறுதல் கூறினார் என்று தொடர்ச்சியாக கூறுகிறது.
 
இது ஒரு புறம் இருக்க மற்றும் ஒரு செய்தியாக 
 
சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்,, என்று செய்தி தருகிறது ஊடகம்.
பாவம் மக்கள் எங்கு செல்வர் .  எல்லா ஏரிகளும் மூடப்பட்டதின் விளைவு. எல்லா குளங்களும் , குட்டைகளும் தரைமட்டமாக்க பட்டத்தின் விளைவு .
 
இப்பிரச்சினை வரும் என்று முன்பே தெரிந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியாது . ஏனெனில் இது கொள்ளை லாபம் தருகிறது .
 
ஊடகங்களுக்கு செய்தி நிறைய கிடைகிறது லாபம் .
 
நிவாரணம் வழங்கும் பேரில் அணைத்து அரசியல் வாதிகளுக்கும் ஏகப்பட்ட லாபம் .
 
அணைத்து அரசு ஊழியர்களுக்கும் லாபம் 
 
மீண்டும் சாலை சீரமைப்பு வேலைகள் நடக்கும் . குத்தகை வழங்கம் அரசியல்வாதிக்கு லாபம் .
 
வெள்ளம் வடிய எப்படியும் ஒரு பத்து நாலாவது ஆகும் . அதற்குள் ஏகப்பட்ட வியாதிகள் வரும்.
அதற்கு ஒரு நிவாரணம் . லாபம்.
 
எல்லாம் லாபம் . இத்தனை பெரிய தொழிலை உருவாக்கி தரும் மழை நீரை தேங்க விடாமல் வடிந்து , அதனை சேமித்து வைத்து வறட்சி நிவாரண லாபத்தையும் இழக்க இங்கு யாரும் முட்டாள் இல்லை.
 
அத்தனை பெரும் அறிவாளிகள் !
 
தமிழன் மட்டும் மாறவே இல்லை !
 
ஏரியை மூடிய போதும் நகைசுவை.
வெள்ளத்தால் மூழ்கும் போதும் நகைசுவை 
குளிரால் நடுங்கும் போதும் நகைசுவை 
குடிசை நீரிலே மிதக்கும் போதும் நகைசுவை !
குடிதண்ணீர் இல்லை என்றாலும் நகைசுவை 
குடும்பமே வெள்ளத்தால் அழிந்தது என்றாலும் நகைசுவை !
 
 
என்னே ! சிரிப்பு ! போதும் சிரித்தது . நிறுத்தி கொள் !
உலகம் நம்மை பார்த்து கைகொட்டி சிரிக்கிறது !
 
மழை பெய்வது ஒரு பிரச்சனையா என்று !
 
வடிகால்கள் அமைப்பது பற்றி நமக்கு யார் கற்றுத்தர வேண்டும் !
 
உனக்கு தெரியும் . எங்கு வெட்டிவிட்டால் எங்கு நீர் சென்று சேரும் என்று !
 
நம் ரத்தத்தில் ஊறியது நகைசுவை மட்டும் அல்ல !
ஆளுமையும் தான் !
நீர் மேலாண்மையை இந்த உலகுக்கு கொடுத்தான் நீ !
மறந்து போனாயோ ?
விழித்து கொள்! விழிப்புணர்வு கொடு !
 
இடுக்கண் வருங்கால் நகுக !
எதிர்பாராமல் வரும் போது !
 
எதிர்பார்த்து வரும் போது 
இடுக்கண் தவிர்த்தும் நகுக !

 
 

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...