Thursday, 9 August 2018

சமையல்

வீட்டில் பெண்களின் சமையல் தான் மருந்து பொருள் .
பெண் தான் மருத்துவர் .
தமிழ்நாட்டில் சமையல் என்பதே , மருத்துவ கூடம் தான் .
ஒவ்வொரு வீடும் கோவில் என்றதன் அர்த்தம் இது தான் ,
ஏனெனில் கோவில்களில் தான் முன்பு மருத்துவம் செய்யப்பட்டது .



சளி பிடித்தால் - மிளகு ரசம்
வயிறு புண்ணுக்கு - மணத்தக்காளி சூப்
கால் வீக்கம் - சுரைக்காய் கூட்டு
சிறுநீர் பிரச்னை - வாழைத்தண்டு கூட்டு
உடல் சூடு - ஆட்டு கால் சூப்
உடல் குளுமை - கோழி கால் சூப்
நினைவாற்றல் பெருக - வல்லாரை துவையல்
இரும்பு சத்துக்கு - முருங்கை கீரை பொரியல்
அறிவு திறன் பெருக - பருப்பு சாம்பார்
உடல் பலம் பெருக - அசைவ உணவு
அதிக கழிவுக்கு - குதிரைவாலி அரிசி தயிர் சாதம்
மலச்சிக்கலுக்கு - கொள்ளு ரசம் .

எல்லாம் மருந்து ,
இதிலே என்ன அறிவியல் என்று எந்த பெண்ணுக்கும் தெரியாது ,
நான் உட்பட !
ஆனால் இதன் நன்மைகள் தெரியும் .
மரத்தின் வேர் இதுவரை செல்லும் , பூ எப்படி இருக்கும் , எந்தெந்த நாட்டில் விளையும் என்று சொல்லி தரும் அறிவியல் பாடத்தை விட , ஒரு மரம் எப்படி வளர்க்க வேண்டும் , என்னென்ன நன்மைகளோடு இந்த மரங்கள் வளர்கின்றன என்று சொல்லி தரும் தமிழ் பாடங்கள் ஆயிரம் மடங்கு மேலானவை .
அப்படி தான் தமிழ் மருத்துவமும் !
அறிவியல் பெயர்கள் எல்லாம் , ஐரோப்பியர்கள் இட்டவை .
அவன் வைத்த பெயர்கள் எங்களுக்கு தெரியவில்லை என்பதில் எங்களுக்கு வருத்தம் இல்லை .
ஏனெனில் அவனுக்கு , நாங்கள் வைத்திருக்கும் பெயர்கள் தெரியாது .
இதற்க்கு இடையில்
இடைத்தரகர் வேலை பார்க்கும் ,
ஐரோப்பிய மருத்துவம் சார்ந்த யாரும் , மெதுவடை குறித்தோ , பருப்பு சாமபார் குறித்தோ கிண்டல் பேசினால் ,
அது உங்களது அறியாமை !


shyamala prasanna


No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...