Thursday, 6 September 2018

விவசாய கடன் - கார்போரேட்டுகள்

2004 ம் ஆண்டு முதல் இந்தியாவில் விவசாய கடனை திருப்பி தர இயலாமல் அல்லது விவசாயத்தில் லாபம் பெற இயலாமல் என்று கிட்டத்தட்ட 18241 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் . கடன் கிடைக்காமலும் , தொடர்ந்து விவசாயம் செய்ய இயலாமலும் கூட தற்கொலைகள் தொடர்கின்றன .

இந்த ஆண்டு 2018 ஜனவரி தொடங்கி ஜூன் வரை மட்டும் 1607 பேர் மஹாராஷ்டிராவில் தற்கொலை செய்து இருக்கிறார்கள் .
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் விவசாய கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராடி , தள்ளுபடியும் பெற்றனர் .கிட்டத்தட்ட 35 லட்சம் விவசாயிகளுக்கு 13,782 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .
மகிழ்ச்சியான செய்தி இது .

ஆனால் இந்த தள்ளுபடி , விவசாயிகளுக்கா தான் நடந்ததா ? அவர்கள் போராட்டம் தான் வெற்றி பெற்றதா ? தெரியவில்லை .
காரணம் , தகவல் அறியும் சட்டத்தின் வழியாக ரிசெர்வே வங்கி  தந்துள்ள தகவல் ஒரு குறிப்பிட்ட தகவலை  கூறுகிறது .

அதாவது 2016 ம் ஆண்டு மட்டும் வங்கிகள் 615 பேருக்கு 58 ஆயிரத்து 561 கோடி ரூபாய் விவசாய கடனாக வழங்கி உள்ளது அதாவது ஒரு வங்கி கணக்கிற்கு  95 கோடி வீதம் விவசாய கடன் வழங்கியுள்ளது ஸ்டேட் வங்கி .
அந்த 615 பேர் யார் ?


இதில் 4 % பேர் கூட விவசாயிகள் இல்லை . எல்லோரும் கார்போரேட்டுகள் . பெரிய நிறுவனங்கள் . அம்பானியும் , அதானியும் , தாங்கள் விவசாய துறையில் ஈடுபடுவதாக கூறி கடன் பெற்று உள்ளார்கள் .
இந்தியாவில் 127 விதமான பழசாறு வகைகளை உற்பத்தி செய்கிறது ரிலையன்ஸ்  நிறுவனம் . இதற்காக மஹாராஷ்ட்ரா விவசாயிகளிடம் பெருவாரியாக நிலங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன . அந்த குத்தகை நில உரிமையாளர்கள் 200 பேர் கொண்டு தான் கடனும் பெறப்படுகிறது .

இப்போது விவசாய கடன் தள்ளுபடி எல்லாம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது . பெரிய நிறுவனங்களுக்கு தான் .


இது போன்ற கடன்களை மோடி அரசு மட்டுமல்ல ,அதற்கு முன்பு இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி யம் வழங்கி இருக்கிறது .

ஆக  மொத்தம் விவசாயிகள் எப்போதும் போல , எல்லா அரசுகளாலும்  ஏமாற்றப்படுகிறார்கள் . அவர்கள் பெயர் சொல்லி பெரிய நிறுவனங்களே நாட்டை சுரண்டுகின்றன .
விவசாயிகள் , குத்தகை என்று  பெரிய நிறுவனங்களிடமோ  , அரசே பார்த்து கொள்ளட்டும் என்றோ எண்ணி யாரிடமும் நிலங்களை கொடுக்க கூடாது . இறுதியில் , யாரோ பணக்காரன் ஆக , விவசாயிகள் பலிஆகுவர் .



No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...