நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை படைத்ததுஇவ் வுலகு ( 336 )
நேற்று இருப்பார் இன்றில்லை இச்சொல்லின் அடிப்படை இக்குறள். நெருநல் எனும் வார்த்தை கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இன்றும் உள்ளது .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். ( 280 )
மு.வரதராசனார் விளக்கம்:
உலகம் பழிக்கும் தீய ஒழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடிப்பதும் சடை வளர்ப்பதும் வேண்டா.
தமிழர்களின் சிறப்பை வெளிபடுத்துவது மீசை வளர்ப்பதும் தாடி வளர்க்காமல் இருப்பதும் .
ஆனால் நாம் வள்ளுவரையே தாடியுடன் வரைந்து அவரையும் பலிக்கு ஆளாக்கிவிட்டோம் .
ஆம் இன்று நாம் பார்க்கும் திருவள்ளுவர் படம் ,1975 ல் K .R .வேணுகோபால் ஷர்மா என்பவரால் வரையபட்டது . இவர் மாடர்ன் தேஎட்டர்சின் உரிமையாளர் . கருணாநிதி மற்றும் அறிஞர் அண்ணாவின் நண்பர் . அதன் விளைவாக இவர் வரைந்த படத்தையே பாட புத்தகங்களில் வள்ளுவன் என அடையாளம் காட்டியது திராவிட முன்னேற்ற கழகம் . 1975 க்கு முன்பு ஒரு வள்ளுவர் படம் இருந்துள்ளது . அதில் அவருக்கு தாடி கிடையாது . அதை வரைந்தவர் ஒரு ஆங்கிலேயர் .
இது சமணர்களால் வரையப்பட்ட திருவள்ளுவர் படம் .
அனால் அவர் மொட்டையும் அடித்திருக்க வாய்ப்பில்லை . தாடி வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை .
ஏனெனில் மொட்டை அடிக்க வேறு பல காரணங்கள் இருக்கின்றன.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிருக்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் . (30)
@@@@@@
மு.வரதராசனார் விளக்கம்:
எல்லா வுயிர்களிடத்தும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவர்.
@@@@@@
அந்தணர் எனப்படுபவர் அறச்செயல் புரிபவர்கள். ப்ரோகிதம் செய்யும் அய்யர்களோ , பிராமனர்களோ அல்ல.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எண்ணி துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (467)
முதலில் களத்தில் இறங்குவோம் பிறகு யோசிப்போம் என்பது இழுக்கையே கொடுக்கும்.
இதற்கான பழமொழி ஆழந்தெரியாமல் காலை விடாதே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். ( 510 )
ஆராயாது முடிவெடுப்பதும் முடிவெடுத்தபிறகு அதன் மேல் ஐயம் கொள்வதும் துன்பத்தையே தரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். ( 720 )
யாரையேனும் திட்ட வேண்டுமாயின் இக்குறளால் திட்டலாம்.
ஏனெனில் நாம் பேசுவதை பொருட்படுத்தாமல் எவரேனும் இருக்கும் போது
கேட்காதவரிடம் பேசுவ்து குப்பையில் விலை உயர்ந்த பொருளை
( அமிழ்து ) கொட்டுவதற்கு சமம் என்கிறார் வள்ளுவர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@