Saturday, 13 December 2014

தஞ்சை மண்

தஞ்சை மண்
அழகிய ஊர் நான் ! 
பசுமைக்கு பஞ்சமில்லை!
பண்பாட்டில் வஞ்சமில்லை !

பலகாலம் கண்பட்டு கண்பட்டு 
கயமையில் 
சிக்கி கொண்டேனோ !












மீத்தேன் மீத்தேன் என்று காதில் விழுகிறது! 

ஓ!

என் உடலை கிழிக்கும் ஆயத்த பணிகள் நடக்கின்றனவா?
அதுதான் அந்த சத்தமா ?


பாலம் கட்டும் வேலையும் சாலைகள் போடும் வேலையும் 
இன்னுமா முடியவில்லை?

என் காதுகளை நான் அடைத்து சில காலங்கள் ஆகிவிட்டன.
எனை விற்று என் பிள்ளைகள் 
தன் பிள்ளைகளை இன்ஜினியரிங் படிக்க வைத்தனர்.

தமிழை  இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்றான் !
தாயையே விற்றவனை கேள்வி கேட்போரே இல்லை !
அது தான் நானும் காதுகளை அடைத்து கொண்டேன் !

எனை விற்க தூண்டியர்கள் இனி என்ன  செய்வர் !
என் வளம் இனி இருக்க போவதில்லை !
என் மடியில் தவழ்ந்த என் பிள்ளைகள் இனி இருக்க போவதில்லை
இனி எதை விற்க சொல்லி தூண்டி விடுவர் ?




ஆயிரம் ஆண்டு பழமையானது என கூறி
 பெரியகோவிலை தத்தெடுத்த UNESCO
இனி அதனை என்ன செய்யும் ?
பாலைவன கோவில் என கூறி சுற்றி காட்டுமா ?

அது எப்படி சாத்தியம் ?
1000 அடியில் தோண்ட போகிறான்
3 அடி அடித்தளத்தில்
அ  இ உ என்னும் அடிப்படை எழுத்தயும்
216 அடி வுயரத்தில் உயிர் மெய்யையும் சுமந்த பெரியகோவில்
1000 அடி சரிவை தாங்கி நிற்குமா ?
சரிவு பெரிகோவிலுக்கு மட்டுமா அதில் ஒளிந்திருக்கும்
தமிழுக்கும் கணிதத்திற்கும் தான் !

இனி கரைநாட்டு சங்கீதம் 
கர்நாடக சங்கீதம் என்ற வாதம் வேண்டியதில்லை

கரை நாடே இருக்க போவதில்லை  எனவே அது
கர்நாடக சங்கீதமாகவே இருக்கட்டும் !

தியாகராஜர் சந்நிதியை என்ன செய்வர்
கலைஞர் குடும்பத்திற்கே அதிகாரம் உண்டு
தான் பிறந்த மண்ணை என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க!

தென்னிந்திய துவாரகா 
மன்னார்குடி 
ராஜகோபால சுவாமியை என்ன செய்வீர் !
இனி தியாகராஜர் உற்சவம் எங்கு நடக்கும் ?




எனை அழித்து முடித்தவுடன் நிம்மதி பெருமூச்சு விடுவார்களா ?
எனை விற்ற அரசியல்வாதிகளும், கட்சிக்காரர்களும், அவர்தம் குடும்பமும் !

அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடபட்டுள்ளன !
தான் விளைவித்த பொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்வேன் என்று குரல் கொடுக்காமல்
இலவசங்களை அள்ளி பருகிய என் பிள்ளைகளுக்கு
விவசாயத்தை விட்டு விடுங்கள் என்று 
அரசியல்வாதிகள் கூறியதன் அர்த்தம் புரியவில்லை !

அப்பாடா! இனி காவிரி நதிநீர் பிரச்சனை இல்லை.
இனி தாரளமாக அனுமதி கொடுங்கள் காவிரியின் மீது அணை கட்டுவதற்கு
இனி அவள் என்னை தேடி வருவதில் பலனில்லை அல்லவா !

கல்லணைக்கும் இனி மதிப்பில்லை!
கரிகாலனை நினைவு கோர வேண்டிய 
அவசியமும் இல்லை.

இனி காவிரி பிரச்சனையை காரணம் காட்டி சினிமாகாரர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதில்லை!
பாவம் கர்நாடக அரசியல்வாதிகள்! இனி எதை நிலை நிறுத்துவேன் என கூறி  வாக்கு கேட்பர் !
ஒன்று மட்டும் என் மனதை வதைக்கிறது ! நான் வளர்த்த என் பிள்ளைகள் என்னை மதிக்க தெரியாமல் என்னை
விற்றுவிட்டனர். ஒருவேளை என்னை மதித்திருந்தால் என்னை போற்றி காத்திருப்பர் .
கண் கெட்ட பின் சூரிய வணக்கம் தேவையில்லை .

போகட்டும் !
எவரையும் நம்பி இருப்பவள் நான் இல்லை !
எனை காக்க மறுக்கும் 
இவர்களிடம் 
கெஞ்சி கேட்கும் 
பேதை அல்ல 
நான் !

அய்யோ பாவம் என சொல்லும் 
கவயர்களிடம் 
அனுதாபம் தேடும் 
கோழை அல்ல
 நான் !

அத்தனை பாவமும் அவர்களை போய் சேரும்
அனைத்து தவறுக்கும் தண்டனை உண்டு !




எனை அழிக்க நினைபோரிடமிருந்து எனை நானே காப்பேன்

புயலென மாறுவேன் ! கடும்
மழையென பொழிவேன் ! பேர்
இடியென இடிப்பேன் ! கொடும்
மின்னலென கண்ணை பறிப்பேன் !
நிலநடுக்கமாய் பிளப்பேன் !
சுனாமியாக சீறுவேன் !

நான்

தஞ்சை மண் 

3 comments:

  1. very nice. i know u r a good writer but i didnt expect this much form u

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Methen theathai olithu thai manai kapom

    ReplyDelete

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...