Monday, 15 December 2014

தெய்வத்தை வழி பட விதிமுறைகள் இல்லை

 எல்லா இடத்திலும் தெய்வம் இருக்கிறது.

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.

எனில்








கோபுர தரிசனம் கோடி புண்ணியம் 

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் 

இந்த கூற்றுக்கள் எதற்காக

எத்தனை முரண் பட்ட கருத்துக்கள்

கோவிலுக்குள் மட்டும் தான் இறைவன் இருக்கிறானா ?

பார்க்கும் இடத்திலெல்லாம் இல்லையா ?

எனில்

பார்க்கும் இடமெல்லாம் இருந்தால் கோவில்கள் எதற்காக ?

அங்கு சென்று வழி  பட என்ன அவசியம் இருக்கிறது ?

சில சமயங்களில் இந்துக்களாகிய நாம் சில விசயங்களை புரிந்து கொள்ள

வேண்டும் . புரிதல் இல்லாமல் போனதாலே பற்பல கேள்விகளும்

முரண்பட்ட விடைகளும் நமக்குள்ளே இருக்கின்றன.


எந்த கடவுளும் எனக்காக பூஜை செய் என்று  கூறவில்லை 

எந்த கடவுளும் எனக்காக இதை செய் அதை செய் என்று கேட்டதில்லை 

கேட்பதும் இல்லை. இனி ஒரு போதும் கேட்க போவதும் இல்லை.

எனில்

தெய்வத்தை வணங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எவரும்

கோவிலுக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை.

இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறான் . கோவிலுக்குள் மட்டும் இல்லை.

அப்படி கோவிலுக்குள் மட்டும்தான் இறைவன் இருகின்றான் என்றால் நம் 

நாட்டில் துறவியரும் ஞானியரும் யோகியரும் கோவிலுக்குள்ளேயே 

தவம் செய்திருப்பார். காட்டிற்குள் வாழ்ந்திருக்க மாட்டார்கள் .

தெய்வத்தை வழிபட , பக்தியை வெளிபடுத்த கோவிலுக்குள் செல்ல

வேண்டும் என்ற கட்டாயம் இல்லை .


அதனால்தான் இந்து மதத்தில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நாளில்

கோவிலுக்கு வரவேண்டும் என்ற விதிமுறைகள் இல்லை. இப்படிதான்

இருக்க வேண்டும் என்று கட்டாய படுத்தாத மதம். இப்படியெல்லாம்

 பாட  வேண்டும் இப்படியெல்லாம் அழைக்க வேண்டும் என்று கட்டாய

படுத்தாத மதம்.

எனில்

கோவில்கள் எதற்காக ? கோவில் என்றால் என்ன ?

கோவிலில் உள்ள விதிமுறைகள் யாருக்காக ?

வழி படும் முறைகள் ஏன் வந்தன ?

நம்மிடம் பலர் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் இருக்கிறதா ?

சாதிகள்  இதில் எப்படி வந்தன  வர்ணாசிரம கொள்கை ஏன் வந்தன ?

நமக்குள் உண்மையாகவே பாகுபாடுகள் இருந்தனவா ?

நம்மை கேள்விகளால் துளைக்கும் நம் அறிவுக்கும் மனதுக்கும் இடையில்

நடக்கும் போருக்கு  தெய்வத்தின் பெயர் சொல்லி சமாதானம் தேடுவது சரியா?



No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...