Sunday, 28 December 2014

திருக்குறள்






நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் 
பெருமை படைத்ததுஇவ் வுலகு      ( 336 )

நேற்று இருப்பார் இன்றில்லை இச்சொல்லின் அடிப்படை இக்குறள். நெருநல் எனும் வார்த்தை கன்னடம் மற்றும் தெலுங்கு  மொழிகளில் இன்றும் உள்ளது .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
பழித்தது ஒழித்து விடின்.     ( 280 )

மு.வரதராசனார் விளக்கம்: 
உலகம் பழிக்கும் தீய ஒழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடிப்பதும் சடை வளர்ப்பதும் வேண்டா.

 தமிழர்களின் சிறப்பை வெளிபடுத்துவது மீசை வளர்ப்பதும் தாடி வளர்க்காமல் இருப்பதும் .
ஆனால் நாம் வள்ளுவரையே தாடியுடன் வரைந்து அவரையும் பலிக்கு ஆளாக்கிவிட்டோம் .


ஆம் இன்று நாம் பார்க்கும் திருவள்ளுவர் படம் ,1975 ல் K .R .வேணுகோபால் ஷர்மா என்பவரால் வரையபட்டது . இவர் மாடர்ன் தேஎட்டர்சின் உரிமையாளர் . கருணாநிதி மற்றும் அறிஞர் அண்ணாவின் நண்பர் . அதன் விளைவாக இவர் வரைந்த படத்தையே பாட புத்தகங்களில் வள்ளுவன் என அடையாளம் காட்டியது திராவிட முன்னேற்ற கழகம் . 1975 க்கு முன்பு ஒரு வள்ளுவர் படம் இருந்துள்ளது . அதில் அவருக்கு தாடி கிடையாது . அதை வரைந்தவர் ஒரு ஆங்கிலேயர் .
who drew the picture of thiruvalluvar க்கான பட முடிவு

இது சமணர்களால் வரையப்பட்ட திருவள்ளுவர் படம் .
அனால் அவர் மொட்டையும் அடித்திருக்க வாய்ப்பில்லை . தாடி வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை .



ஏனெனில் மொட்டை அடிக்க வேறு பல காரணங்கள் இருக்கின்றன.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அந்தணர் என்போர் அறவோர்மற்   றெவ்வுயிருக்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் .     (30)

@@@@@@
மு.வரதராசனார் விளக்கம்: 
எல்லா வுயிர்களிடத்தும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவர். 
@@@@@@

அந்தணர் எனப்படுபவர் அறச்செயல் புரிபவர்கள். ப்ரோகிதம் செய்யும் அய்யர்களோ , பிராமனர்களோ அல்ல.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


 எண்ணி துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு.      (467)

முதலில் களத்தில் இறங்குவோம் பிறகு யோசிப்போம் என்பது இழுக்கையே கொடுக்கும்.
இதற்கான பழமொழி  ஆழந்தெரியாமல் காலை விடாதே.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் 
தீரா இடும்பை தரும்.     ( 510 )

ஆராயாது முடிவெடுப்பதும் முடிவெடுத்தபிறகு அதன் மேல் ஐயம் கொள்வதும் துன்பத்தையே தரும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் 
அல்லார்முன் கோட்டி கொளல்.     ( 720 )

யாரையேனும் திட்ட வேண்டுமாயின் இக்குறளால் திட்டலாம்.
ஏனெனில் நாம் பேசுவதை பொருட்படுத்தாமல் எவரேனும் இருக்கும் போது
கேட்காதவரிடம் பேசுவ்து குப்பையில் விலை உயர்ந்த பொருளை
( அமிழ்து  )  கொட்டுவதற்கு சமம் என்கிறார் வள்ளுவர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



1 comment:

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...