Saturday, 20 December 2014

மலாய் நாடும் தமிழ் மண்ணும்


உயர்ந்து நிற்கும் பனை மரங்கள்
     போட்டியிட்டு விஞ்சி நிற்கும் கட்டிடங்கள்!

தன்னையும் காட்டிக்கொள்ள முயற்சிக்கும் மலைகள் !
     அதனை முட்டிக்கொண்டு எட்டி பார்க்கும் மேகங்கள்!

உடலை சுட்டெரிக்கும் சூரிய கணைகள்!
     அதன் வேகத்தை தடுக்க போராடும் சில கனிகள் !

மொழி வேறு இனம் வேறாய் மனிதர்கள் !
     அவர்களை இணைத்து கொண்டே இருக்கும் அவர்தம் மனங்கள்!

இயற்கையும் இயல்பும் கூறுகிறது
     இம்மண் வாசனை நான் நுகர்ந ததென்று !

லங்காவி யாய்  அலொ ஸ்டாராய்  மாறிவிட்டதால்
     தமிழ் பெயர்கள் மாறிவிடாது.

கதா வாகி விட்டதால் கடாரம் இல்லை என்று ஆகாது!
     இடப் பெயர்கள் மாறியதால் தமிழ் அங்கு இல்லை என்று ஆகாது!

ஆண்டாண்டு காலமாய் மலாய் மொழியில் வாழ்கின்ற சொற்கள் !
     ஆயிரம் முறை மாற்றினாலும் மாறாத ஊர் பெயர்கள் !
     ஆணையிட்டு தடுத்தாலும் மீட்க முடியாத பழக்கங்கள் !

இவையெல்லாம் ,

     கூறிக்கொண்டே இருக்கும் இதுவும் குமரிகண்டம் என்று !

பரமேஸ்வரன் வரலாறில் இங்கு வரலாறு தொடக்கம் !
     மறைக்கப்பட்ட வரலாறில் தமிழும் அடக்கம் !

கூவி கூவி கூறுகிறார் பலர் தமிழர் எண்ணிகையில் குறைவென்று !
     கூறி கூறி பாருங்களேன் அவர் பழக்கங்களில் ஏதேனும் குறை ஒன்று !

மறுத்தாலும் எதிர்த்தாலும் சட்டமிட்டு தடுத்தாலும்
     இயற்கை கூறும் இம்மண்ணும் தமிழ் மண் என்று !


@@@@@@@@@@@@

ஊர் பெயர்கள்

கோலாலம்பூர், செலாங்கூர் , ஜோகூர், பாகூர் , கேளந்தன் , கதா (கடாரம் ), செந்தூள் , சபா. (ஊர் என்று முடியும் பெயர் எந்த ஊருக்கு இருந்தாலும் அது தமிழன் வாழ்ந்த ஊர் )

கி.பி 1402 ல், பரமேஸ்வரன் என்னும் விஜய நகர பேரரசு மன்னன், இஸ்லாமிய மதம் மாறுகிறான் . அங்கிருந்து மட்டுமே வரலாறு தொடங்குவதாக இங்குள்ள அருங்காட்சியகம் கூறுகிறது . அதற்கு முன்பே இங்கு தமிழன் வாழ்ந்து இருக்கிறான்








2 comments:

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...