Monday, 15 December 2014

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்.( தொடர்ச்சி )

!!! கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க கூடாது.

கோ எனப்படும் மன்னனின் செல்வம் நிறைந்த இடத்திற்கும் 

கோவில் என்றே பொருள் கொள்ளப்பட்டது . 

மன்னனின் கருவூலங்கள் 

மன்னர்கள் கோவில்களிலேயே நாட்டின் செல்வத்தையெல்லாம் 

வைத்திருப்பார்.  ஏனெனில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு 

முன்பெல்லாம் போர் காலங்களில் சில விதி முறைகள் 

பின்பற்ற பட்டன.

அவை யாதெனில் 

1. பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் வுடல் வூனமுற்றூர் 

இவர்கள் மீது தாக்குதல்கள் நடத்த கூடாது.

2. கோவில்களை இடிக்க கூடாது.

3. தவறான எதையம் நீர்நிலைகளில் கலக்க கூடாது.

4. விவசாய நிலங்களை நாசபடுத்த கூடாது.

5.குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே போர் நடக்க வேண்டும்.

6. நூல்களை பாது காக்கும் இடங்களில் நுழைய கூடாது.

இவ்விதிமுறைகளின் அடிப்படையில் கோவில்கள் எந்த எதிரியின் 

தாக்குதல்களிலும் சிக்காது. என்ற நம்பிக்கையில் கோவில்கள் 

மன்னனின் கருவுலங்களாக மாறின.  ஆனால் 

கி.பி.5 ம் நூற்றாண்டு காலத்திலேயே இவ்விதிமுறைகள் 

மீறப்பட்டன.

எனவே ஒரு நாட்டின் கோவில்களை கொண்டே அந்நாட்டின் 

செல்வசெழிப்பை அறிந்து விடலாம் .  இக்கருத்தை கொண்டு 

பார்த்தால் கோவில்கள் அரசு கருவூலங்கள் ஆகும் .  

பிற்காலத்தில் தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனும் தஞ்சை 

பெரிய கோவிலை  அரசு கருவூலமாக பயன்படுத்த 

எண்ணியதன் விளைவே பெரிய கோவிலை சுற்றிலும் 

அகழிகள் வெட்டி இருக்கிறான்.

எனவே கோவில்கள் செழிப்பாக இருந்தால் நாட்டு மக்களும் 

செழிப்பாகவே இருப்பார்.  அதன் விளைவாகவே 

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க கூடாது. என்ற கூற்று

வுருவானது.


!!! பரிகார ஸ்தலங்களுக்கும் கோவில்கள் என்றே பெயர்.

பரிகார ஸ்தலங்கள் என்பது என்ன?

அது ஒரு சிறப்பு மருத்துவ மனை ஆகும்.

எனவே மருத்துவமனை இல்லாத ஊரிலும் குடி இருக்க கூடாது.

!!!   எனில் நாம் வழிபடும் கோவில்கள் என்பதுதான் என்ன?

தெய்வத்தை  இங்கே வந்துதான் வழபட வேண்டும் என்று 

கூறக்கூடிய எந்த இடமும் இந்து மதத்தில் இல்லை. 

இறைவன் எனபடுபவன் இந்த இயற்கையாய்  இருக்கிறான்.

அவன் எல்லா இடத்திலும் இருப்பான் .நீராக , நெருப்பாக

காற்றாகநிலமாக,விண்ணாக நம்மோடு இருப்பவன். நாம் 

விரும்பினால் அதை இறைவனாக பார்க்கலாம். இல்லையெனில் 

இயற்கையாகவே பார்க்கலாம். 

இந்து மதம் இயற்கை வழிபாட்டு மதம். 

இதில் எல்லாம் மதிப்பு பெரும். 

இதில் எல்லாம் சமம். உயர்வு தாழ்வு என்பதே இல்லை.





No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...