தஞ்சாவூர் அப்புடின்னு சொன்ன உடனே எல்லோருக்கு என்ன தோணும்.
தஞ்சாவூர் பெரிய கோவில்
தஞ்சாவூர் விவசாய பூமி
தஞ்சாவூர் வேளாங்கண்ணி
தஞ்சாவூர் சோழர் ஆட்சி
இவையே நினைவுக்கு வரும் .
இதனை கடந்து
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
தஞ்சாவூர் ஓவியம்
தஞ்சாவூர் தட்டு
தஞ்சாவூர் சாம்பார்
நினைவுக்கு வரும் . ஆனால் இவை தஞ்சவுரின் பூர்விகங்கள் அல்ல .
தஞ்சாவூர் பற்றி நிறைய விஷயங்கள் யாரும் பேசுறதே இல்லை
ஏனோ தெரிய வில்லை . சோழர்கள் ஆட்சியுளும் ராஜா ராஜா சோழன் மட்டும்தான் இடம் பெறுகிறான். மற்ற எல்லா அடையாளங்களும் நாயக்கர்களும், மராட்டியர்களும் உருவாக்கியது .
ஒரு காலத்தில் பல்லவர்கள் ஆட்சியின் கீழ் சோழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று பார்த்திபன் கனவில் கல்கி அவர்கள் குறிப்பிடுகிறார் . அதுவும் கூட உறையூர் பற்றியே சுற்றி வருகிறது .
சங்க கால இலக்கியங்களில் தஞ்சாவூர் என்ற பெயர் இல்லை . ஆனால் தஞ்சையை சுற்றி உள்ள ஊர் பெயர்கள் அமைந்துள்ளன .
அந்த கால கட்டத்தில் தஞ்சாவூர் என்ற பெயர் சூட்டப்படவில்லை .
தஞ்சாவூர் தனித்துவம் வாய்ந்தது .
சோழர் ஆட்சிக்கு முன்பு இங்கு முத்தரையர் ஆட்சி இருந்தது .
தனஞ்சயன் எனும் மன்னரின் காலத்தில்தான் தஞ்சாவூர் , ஒரு ஊர் வடிவம் பெற்றது .
முக்கால்வாசி விவசாய பூமி . ஒருபுறம் முந்திரி காடுகள் .
பாம்புக்கும் , பூச்சிக்கும் சற்றும் குறைவில்லாத ஊர்.
தஞ்சாவூர் வரைபடம்
நீர் இல்லாத காலங்களில் , நீர் அதிகம் தேவைபடாத புஞ்சை பயிர்கள் விளையும் .
கிடைக்கின்ற நீருக்கு ஏற்ப விளைவை தரும் பூமி .
அங்கு எப்போது , என்ன விளையும் என்பது அங்குள்ள மக்களும் நன்கு அறிவர்.
தஞ்சை மண் பொன் விளையும் பூமி.
வேளாண் அறிவியலை விதைத்த பூமி தஞ்சாவூர் .
வணிகத்தில் சிறிதும் சளைக்காத ஊர்.
நாகபட்டினமும், அதிராம்பட்டினமும் துறைமுக நகரங்களாக விளங்கி வணிகத்தை வளர்த்துள்ளன .
இன்று எந்த வியாதி என்பதை கண்டறியவே சில பல லட்சங்களை செலவழிக்க வேண்டிய நிலையில்
மருத்துவ அறிவியலில் , அடிபடை கொடுத்த ஊர் தஞ்சாவூர் .
கலைகளிலும் சற்றும் குறைவில்லாதது .
கரகாட்டம் , நாதஸ்வரம் என கலைகளில் கொடி கட்டி பறந்த ஊர் .
இன்றைய பரதநாட்டியத்தின் தாய் சதுர் என்னும் நடனத்தின் சொந்த ஊர் .
மதுரையை சேர்ந்த ருக்மிணி தேவி அம்மையார்தான் , சதுர நடனத்தை பாரத நாட்டியமாக மாற்றியவர் .
உலகளாவிய ஒரு கலையின் தாயகம் தஞ்சாவூர் !
எல்லோரும் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதலில் கால் வைத்தது
பிளாசி போர் , பக்சார் போர் வழியாக 1757 ல் கல்கத்தாவில் தான் என்று கூறுவார்கள் .
அனால் முதன்முதலில் அவர்கள் கால் வைத்தது தஞ்சையில் தான்.
இது இந்தியாவில் ஆங்கிலயர்கள் தடம் பதிக்க அஸ்திவாரம் .
வரலாற்று மாற்றத்தின் அடிப்படை தஞ்சாவூர் .
தமிழ்நாட்டின் அசைக்க முடியா நிலையில் இருந்த காங்கிரசை வீழ்த்த எண்ணி கருணாநிதியின் வெற்றி நிர்ணமானது இங்குதான்.
1962 ல் பரிசுத்த நாடாரை தோற்கடித்து வெற்றி கொண்டார் கருணாநிதி .
தமிழக அரசியல் மாற்றத்தின் அடிபடையும் தஞ்சாவூர்
நாளைய உலக அரசியல் மாற்றத்தின் அடிப்படையாய் அமைய போவதும் தஞ்சாவூர் தான் !
-----------------------------------------
தஞ்சவுரின் மிக பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று தஞ்சை வாழ்
ஆனந்த வள்ளி உடன் உரை தஞ்சபுரீஸ்வரர் .
தஞ்சபுரீஸ்வரருக்கு மற்றொரு பெயர் உண்டு.
குபேரபுரீஸ்வரர் .
இது குறித்து புராண கதைகள் கூறுவன :
ராவணனிடம் , தன சொத்துகள் அனைத்தையும் இழந்த அவனது மூத்த சகோதரன் குபேரன் இங்கு வந்து சிவனை வழிபட்டு , இழந்த தன சொத்துகளை மீண்டும் பெற்றான்.
எனவே இங்கு வந்து குங்கிளியத்தில் தீபம் வைத்து வழிப ட்டால் இழந்த சொத்துக்களை மீண்டும் பெறுர் என்றும் சொத்து இல்லாதவர்கள் கூட சொத்து பெரும் வாய்ப்பை பெறுவர் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.
தஞ்சம் அடைந்த வர்களை காப்பவன் என்பதால் தஞ்சபுரீஸ்வரர் என்றும் வழங்கபடுகிறார் .
இவர் பெயரால் தான் தஞ்சாவூர் என்ற பெயரும் வழங்கபடுகிறது என்றொரு கருத்தும் உள்ளது.
இக்கோவில் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 4 கி.மீ தொலைவில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது.
இது 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில்.
பிற்காலத்தில் நாயக்க ஆட்சின் கீழ் தஞ்சை வந்தபொழுது இக்கோவிலின் நேரெதிரில் பெருமாள் கோவிலும் எழுப்பப்பட்டுள்ளது .
இதே நாயக்கர்கள் ஆட்சியில் தான் இங்குள்ள ஆனந்தவல்லி அம்மன் ஆலயம் எழுப்ப பட்டுள்ளது.
இது தற்பொழுது கோடியம்மன் என்ற பெயரில் , தனி ஆலயமாக கோவிலின் இடது புறத்தில் கட்டப்பட்டுள்ளது.
கோடியம்மன் , தஞ்சபுரீஸ்வறரை பார்த்த வண்ணம் இருப்பாக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
தஞ்சவூருக்குள் வருபவர்கள் தஞ்சபுரீஸ்வறரை வழிபட்ட பிறகுதான் , ஊருக்குள் வந்திருக்கிறார்கள் . ஆனால் இன்று இவ்வழக்கம் இல்லை.
ஆனால் கோவிலின் பராமரிப்புகள் சற்றே சிறிய சேதங்களோடு இருந்த போதும் ,எப்பொழுதும் போல் தஞ்சைக்குள் வருவோர் அனைவருக்கும் தஞ்சம் அளித்து கொண்டுதான் இருக்கிறார் தஞ்சபுரீஸ்வரர்.
----------------------------------------------
இவர் 1484 ல் கர்நாடகா மாநிலத்தின் சிமோக மாவட்டத்தில் பிறந்தவர்.
1564 ல் மறைந்தார் . இவர் 4 லட்சத்து 75 ஆயிரம் கீர்த்தனைகள் பாடினார் என்றும் , ஆனால் இப்போது 700 மட்டுமே உள்ளது என்றும் கூறுவார்.
கிருஷ்ணா தேவராயர் ஆட்சி காலத்தில் தான் இவரது இசை பணி நடந்துள்ளது.
இன்றும் கர்நாடக மாநிலத்தின் எந்த ஒரு கோவிலிலும் புரந்தர தாசர் மற்றம் அவரது சீடர் , (கனகபுரியின் அரசராக இருந்து பின் பக்தி மார்க்கத்திற்கு வந்த) கனக தாசரின் பாடல்களே கல்வெட்டுகளாக செதுக்கப்பட்டுள்ளன .
சங்கீத மும்மூர்த்திகள்
தியாகராஜர் - இவரும் இசை பணி ஆற்றியவர் .1767 ல் தஞ்சையில் பிறந்த தெலுகு பிராமணர் . நாயக்கர்கள் தஞ்சையை ஆண்ட காலத்தில் , தஞ்சைக்கு வந்த தெலுங்கு மக்கள் பலர் இங்கேயே தங்கி விட்டனர். அப்படி இங்கேயே வாழ்ந்த மக்களில் தியாகராயரின் பெற்றோரும் உண்டு.
காவேரி, குடமுருட்டி ஆறு ,வெண்ணாறு, வெட்டாறு , அரசிலாறு என்று 5 ஆறுகளை கொண்ட தஞ்சையில் , இந்த ஐந்து ஆறுகளும் கூடும் திருவையாற்றில் பிறந்தவர்தான் தியாகராயர்.
இவர் 1000 மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள போதும் , இவரது பஞ்ச இரத்தின கீர்த்தனைகளே பிரபலமானவை. அனைத்தும் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது. இன்றும் பெப்ருவரி மாதங்களில் தியாகராஜ ஆராதனை திருவையாற்றில் நடைபெறுகிறது.
ஷ்யாமா சாஸ்திரி
1762 - 1827 வரை வாழ்ந்தவர். இவர் திருவாரூரில் பிறந்தவர்.
இவர் தமிழ் பேசும் பிராமணர். வேங்கட சுப்ரமனியனாக இருந்து பின் பெயர் மாற்றம் பெற்றவர்.
இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் காமாட்சி அம்மனை பற்றி பல பாடல்கள் எழுதி உள்ளார். இவர் ஸ்வர ஜதிகளை கொடுத்தவர்.
இவரை பின்பற்றி அவர் மகன் சுப்ப ராய சாஸ்திரி , மற்றும் பேரன் அன்னமைய சாஸ்திரி ஆகியோரும் இசை பணியாற்றி உள்ளனர்.
முத்துச்வாமி தீட்சதர்
1775 - 1835 வரை வாழ்ந்த திவாரூர குருகுகர் . இவரும் தமிழ் பிராமணர். இவர் தனது பாடல்களை மணிபிரவாள நடையில் எழுதிஉள்ளார்.
மணி பிராவாள நடை எனப்படுவது தமிழும் சமஸ்க்ரிதமும் இணைந்தது .
நாயக்கர்கள் ஆட்சி காலத்தில்தான் தமிழில் அதிக சம்ஸ்கிருத வார்த்தைகள் கலந்தன . அதன் வெளிபாடே மணி பிராவள நடை தமிழ்.
இவர் எழுதிய மஹா கணபதி என்ற பாடலே தற்போதும் திரு . ஜேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலிக்க நாம் கேட்டு கொண்டு இருக்கிறோம்.
சங்கீதம் என்றால் இந்த மும்மூர்த்திகள் மற்றும் புரந்தரதாசர் இவர்களோடு முடிவது போல் உள்ளது .
சங்கீத உலகம் 1400 களுக்கு முன்பு இல்லாதது போலும் , நயாக்கர்கள் ஆட்சியில் தான் சங்கீதம் வளர்ச்சி பெற்றது போலும் சித்தரிக்கின்றன வரலாறுகள்.
நாயக்கர்கலால்தான் சங்கீதம் வாழ்ந்தது எனில் தஞ்சையை தவிர , வேறு எங்கும் சங்கீதம் வளர்ச்சி பெற வில்லையே .
அவர்கள் சொந்த மண்ணில் கூட சங்கீதம் வளரவில்லையே , ஏன் ?
சங்கீதத்தின் பிறப்பிடம் தஞ்சை மண்.
நாயக்கர்கள் காலத்திலும் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட பாடல்கள் மட்டும் பிரபலபடுத்த பட்டுள்ளன.
ஒருவர் கூட வா தமிழில் பாடல் எழுதவில்லை.
கி. பி 2 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் , சங்கீதம் காவிபூம்பட்டினத்தில் விழாவாக வாழ்ந்துள்ளது என்பதற்கு சாட்சி.
இன்றுள்ள சங்கீதத்தில் ச முதல் எழுத்தாக உள்ளது.
ஆனால் கண்ணகி காலத்தில் முதல் எழுத்து ம
இவை தான் வித்தியாசம் .
சோழர்கள் காலத்திலும் கண்ணகி கால வரலாறுகள் பாடல்களாகத்தான் கற்று தரப்பட்டுள்ளன.
நாயக்கர்கள் , தெலுங்கு மற்றும் பிராமணர்களின் இசையை மட்டுமே புகழ்ந்து அவற்றை மட்டுமே வளர்த்துள்ளனர்.
ஆனால் எல்லா சங்கீத கீர்தனைகளுக்கும் அடிப்படை தஞ்சை வாழ் மக்களின் கிராமப்புற பாடல்களே !
இன்றும் எல்லா விதமான இசை கருவிகளும் இங்கு தயாரிக்கபடுகின்றன . இதனை தயாரிப்பவர் யாரும் பிராமணரோ , தெளுங்கரோ கிடையாது .
இது இம்மண்ணுக்கே சொந்தமான கலை !
----------------------------------------------------