Thursday, 11 February 2016

டாய்லெட்

டாய்லெட்  - இது பற்றி பேசுறது கொஞ்சம் அசிங்கம்னு நினைக்கலாம் .
ஆனால்
அடிப்படை தேவைகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவது 
உணவு , உடை , உறையுள் எனப்படும் தங்கும் இடம் .
இது தவிர அடுத்த கட்ட தேவை செல்வசெழிப்பான வாழ்கை . அதாவது கார் , வீடு என்று வசதியாக வாழ்வது . 
மூன்றாம் கட்ட அடிப்படை தேவை ஸ்டேடஸ் எனப்படும் சமுதாய அந்தஸ்து .
இதன் அடிப்படையில் தான் இன்று உலகமே உணவு தேவை முடிந்தவுடன் பணம் பணம் என்று அழைந்து கொண்டு இருக்கிறது .

ஆனால் உண்மையில் அடிப்படை தேவை என இறைவன் நமக்கு தெரிவிக்கும் தேவைகள் வேறு .
1. உணவு 
2.கழிவு வெளியேறுவது . ( சிறுநீர் , மலம் , மாதவிடாய் காலம் )
3.உடல் உறவு 

இவ்வளவு தான் இறைவன் நமக்கு தந்த தேவைகள் .

இதை கடந்து மனிதன் விலங்குகளிடமிருந்தும் , குளிர் மழை இவற்றில் இருந்து பாதுகாக்கவும் ஆடைகளையும் , தங்கும் இடங்களையும் அமைத்து கொண்டான் .

இதனை கடந்து ஒரு மனிதனுக்கு வேறு என்ன வேண்டும் ?

ஆனால் இந்த  உணவு பிரச்னைக்கு பிறகு பேசப்படும் பிரச்சனைகளே வேறு .

உடல் உறவு என்பது ஒழுங்கு கட்டுப்பாடுகளுக்குள் வரவேண்டியது . அது மற்றொரு விதமாதாய் அணுக வேண்டியது .

ஆனால் கழிவு வெளியேற்றுவது குறித்து பேச இந்தியாவில் ஆளே இல்லை என்றுதான் கூற வேண்டும் .







யாரும் இதைஒரு பொருட்டாக கொள்வதில்லை .
ஏன் என்று புரியவில்லை?

அப்படி என்ன பாவம் கண்டது இந்த சமுதாயம் !

எந்த அரசும் , இது குறித்து பெரிதாக எடுத்து கொளவதில்லை .

ஒரு சில இடங்களில் இது எதோ பெண் சம்பந்தப்பட்ட பிரச்சனை போல் பேசபடுகிறது .

சாதாரண பள்ளிகளில் கழிவறை என்பதே இல்லை . இருந்தாலும் யாரும் சுத்தம் செய்வதில்லை 
தனியார் பள்ளிகளில் இருக்கின்ற கழிவறைகள் பற்றி மாணவர்கள் பெரிதாக பேசிகொள்வதில்லை . அது அவமானம் என கருதுகின்றனர் .

ஒரு KG பள்ளிகளில் சிறு குழந்தைகளுக்காக வைக்கப்படும் கழிவறை நன்றாக இருந்தாலும் ,தொடர்ந்து 2 நாட்கள் ஒரு குழந்தை பள்ளி கழிவறையை பயன்படுத்தி விட்டால் அதுத்த நாள் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்குகிறது நிர்வாகம்.
காலையில் எழுந்தவுடன் வெந்நீர் கொடுங்கள் வீட்டிலேயே கழிவு வெளியேற்றும் பழக்கத்தை கொண்டுவாருங்கள் . அது ஒன்றுதான் நல்ல பழக்கம் என்று கூறி பெற்றோரை அவமதிக்கிறது பள்ளிகள் .

வயதுக்கு வந்த பெண்களின் நிலையோ இன்னும் கேவலம் . கதவு இருப்பதில்லை . நீர் வருவதில்லை . கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு இது குறித்து எந்த அக்கறையும் இல்லை . காசுக்காக வேலை பார்பவர்கள் தானே .!
சமூக அக்கறை எங்கிருந்து வரபோகிறது . பெண்கள் ஆண் ஆசிரியரிடம் பேசுவதில்லை . பெண் ஆசிரியர்கள் முற்றிலும் வேஸ்ட் !
பல ஆசிரியர்கள் , அந்த வேலைக்கு தகுதி என்பதே இல்லாதவர்கள் .

ஆண்கள் நிலையும் விதிவிலக்கு அல்ல. கழிவறை இல்லாத நிலையில் சாலையோரங்களை பயன்படுத்தி கெட்டபெயரையும் சேர்த்து எடுக்க வேண்டியுள்ளது .

பள்ளிகள் நிலையோ கேவலம் என்றால் , கண்டிப்பாக கழிவறை இருக்க வேண்டிய மற்றொரு இடம் மருத்துவ மனை .

எல்லா மருத்துவமனைகளிலும் கழிவறை உள்ளது . ஆனால் எங்கு இருக்கிறது என்று பத்து பேரிடமாவது விசாரிக்கும் அளவிற்கு மருத்துவமனையின் எதோ ஒரு மூலையில் உள்ளது . அத்தனை அசிங்கமான விஷயமா என்ன ?

ரத்தபரிசோதனை நிலையங்களில் ஒரு பெண் நோயாளி கழிவறை எங்கு இருக்கிறது என்று கேட்க வெட்க பட வேண்டி உள்ளது . 

மிகபெரிய ஷாப்பிங் மால்களில் கூட 4 மாடிக்கு செல்லுங்கள் .என்று கூறும்போது அங்கு பொய் சேரவே 10நிமிடங்கள் ஆகும் நிலை ! இதற்க்கு முக்கித்துவம் கொடுத்திருந்தால் ஒவ்வொரு மாடிக்கும் ஒரு கழிவறையாவது வைத்திருப்பார்கள் .

கோவில்கள் நிலை சொல்லவே வேண்டாம் . இதற்கு இந்து கிறிஸ்தவன் என்ற வேறுபாடெல்லாம் இல்லை .  எல்லா கோவில்களிலும் , ஒரு குழந்தைக்காகவோ , வயது முதிர்ந்தவர்களுக்காகவோ கழிவறை தேடினால் , அரை மணி நேரம் நடந்தால் , அங்கும் ஒரு மூலையில் எதோ கொலை குற்றங்கள் நடக்கும் இடம் போல்  உள்ளது கழிவறைகள்  .

வெறும் வார்த்தைகளால் சொல்லி விடலாம் , உடல் கழிவையும் , உள்ள கழிவையும் வெளியேற்றி விட்டுதான் கோவிலுக்குள் நுழையவே வேண்டும் என்று .!

அனால் இது எப்படி குழந்தைக்கும், முதியவர்களுக்கும் பொருந்தும் ?.

சிந்திக்க எவருக்கும் நேரம் இல்லை . பக்தியில் திளைத்து , முக்தி  அடைவது ஒன்றே நோக்கம் !.அவ்வளவு பக்திமான்கள் !

சரி , குழந்தைக்கும் , முதியவருக்கும் டையபர் போட்டுவிடுங்கள் என்று கூறிவிட்டாலும் , டையபர் உடலுக்கு நல்லதுதானா ?


ஹோட்டல் களில் , பெரிய ஹோட்டல்களில் கூட கை கழுவும் இடம் வரை நீர் வருகிறதா என்று சரிபார்க்கும் நிர்வாகம் கழிவறை பற்றி கவலை கொள்ள வதில்லை . எவரேனும் சத்தம் போடும் போது மீண்டும் வேலை நடக்கிறது .

நிறைய பணம் கட்டி கிளப்களில் மெம்பெர் என்றாலும் கூட அங்கும் கழிவறை மீது அக்கறை சற்று குறைவுதான் !

இவையெல்லாமே இப்படி என்றால் அரசு அலுவலகங்களில் , அரசு ஊளியர்களுக்கே  அங்கு சரியான கழிவறை இல்லை . இதிலே வந்து செல்லும் பொது மக்கள் குறித்து கவலைப்பட யாரேனும் இருப்பார்களா என்ன ?  முக்கியமாக நகராட்சி அலுவலகம் !

சினிமா தியேட்டர் , exhibition ,zoo , park  , bus stand , railway station என்று எந்த அரசு சார்ந்த , சாராத நிறுவனமும் விதிவிலக்கு அல்ல !

ஏன்  toilet போறது அப்படி ஒன்றும் குற்ற செயல் அல்ல !
எல்லாரும் அரிசிக்காக போராடியது போல் போராட கூட வேண்டாம் !
Toilet போறத கேவலம்னு நினைக்காம இருந்தா போதும் !
Toilet எங்க இருக்குன்னு கேட்ட சிரிக்காம இருந்தா போதும் !
இந்த கழிவறை புரிதல் இல்லாமல் போனதால்தான் 
பல இடங்களில் பெண் கற்பழிப்புகள் நடந்துள்ளன !
இந்த கழிவறைகள் தூய்மை இல்லாமல் போனதால்தான் 
பேய் இருக்கும் இடம் போல் மாறி 
கொலைகள் நடக்கும்  இடம் போல் மாறின !


வீதிக்கு ஒன்று , இரண்டு பள்ளிகள் !
வீதிக்கு எல்லா மதத்திற்கும் கோவில்கள் !
வீதிக்கு மருத்துவமனை !
வீதிக்கு இரண்டு மருந்தகம் !
வீதிக்கு நான்கு ஹோட்டல்கள் !
வீதிக்கு ஒரு தாங்கும் விடுதி !
வீதிக்கு ஒரு மது கடை !

வீதிக்கு ஒரு கழிவறை எங்கே ?


 .தூய்மை இந்தியா எனபடுவது மக்கள் மட்டும் குப்பைகளை , குப்பை தொட்டியில் போடும் விஷயம் அல்ல .!
வீட்டிற்க்குள் எல்லாரும் கழிவறை கட்டுங்கள் 
என்று வரும் விளம்பரங்களில் அல்ல !
வீதிக்கு ஒரு கழிவறையும் 
நான்கு வீட்டிற்கு ஒரு குப்பைதொட்டியும் வைப்பதுதான் !


செய்யுமா அரசு ? 





No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...