Monday, 29 February 2016

ஒண்ணுமே புரியலையே


காட்டில் மனிதன்  உணவிற்காக  வேட்டையாடி உண்ட போது கூட எல்லா விலங்குகளும் அதிக எண்ணிகையில் இருந்தன .
இன்னைக்கு  விலங்கு பாதுகாப்பு சட்டமெல்லாம் இருக்கு , ஆனா விலங்குகள் எண்ணிக்கை குறையுதே ?
 ஒண்ணுமே புரியலையே
வீடு நிறைய சொந்தகாரங்க இருந்தப்ப தோட்டத்துக்கு நடுவில சின்னதா வீடு கட்டி வாழந்த மக்கள் ,
இன்னைக்கு எந்த சொந்தகாரனையும் வீட்டுக்கு வரவிடுறதே இல்ல !
இப்போ போ ய் 2400 சதுர அடியிலயும் வீட்டை கட்டி அடுத்த வீட்டு காம்பௌண்டை யும் சேர்த்து கட்டி வைக்கிறன்களே !
யாரக்க இருக்கும் ? 
ஒண்ணுமே புரியலையே !




எங்க போனாலும் தமிழ் மக்கள் மொழி வெறியர்கள்னு சொல்றாங்க !
ஆனா உலகம் முழுக்க எந்த நாட்லயும் அந்த நாட்டு மொழியை கத்துக்க மாட்டேன்னு  தமிழர்கள் சொன்னதே இல்லையே !

உதாரணமாக கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு , தமிழ் , தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என 5 மொழிகள் சரளமாக வரும். இங்குள்ள பாட புத்தகத்தில் கன்னடம் தான் உள்ளது .யாரும் எதிர்த்ததே இல்லை.
மலேசியாவில் உள்ள தமிழர்கள் , தமிழ், மலாய் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திறன் படைத்தவர்கள் .

தமிழ் நாட்டுக்குள்ளேயும் சரிபாதி பேருக்கு ஹிந்தியும் , ஆங்கிலமும் தெரியும்.

 தாய் மொழி பள்ளிகள் தேடி அலையும் வடுகர்களை  விடுத்து , எங்க போனாலும் அந்த ஊரின் உள்ளூர் மொழியை கற்று கொள்ளாமல் , ஹிந்தி மே ராஷ்டிர பாஷா , இது தெரியாம இந்த ஊர் மக்கள் இருக்குறாங்களே என்று அலட்டி கொண்டு , எல்லா ஊர் மக்களையும் திட்டும் இந்த உத்திர பிரதேசம் , மற்றும் உத்தர்காண்ட் மக்கள் , இவங்களையெல்லாம் விட்டுட்டு 
தமிழ் மக்களை மொழி வெறியன்னு சொல்றாங்களே ! 
 ஒண்ணுமே புரியலையே

இந்தியாவில் கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தவிர்த்து எல்லோருமே, ஹிந்துக்கள்தான் ன்னு சொன்ன , ஏன் தமிழ்நாட்டை தாண்டி யாருமே ஆடிபெருக்கும், தை பூசமும் கொண்டாடுவதே இல்லை ?


 ஒண்ணுமே புரியலையே 

அர்த்தசாஸ்திரத்தில் , ஒரு சில தவறுகளுக்கு 14 ஆண்டுகள் காட்டில் சென்று வாழ வேண்டும் என்ற சட்டம் இருந்துள்ளது .
அதே 14 ஆண்டு கால கணக்கை ராமாயணம் சொன்னது . சரி 
அதே 14 ஆண்டு கால தண்டனையை மகாபாரதமும் சொன்னது . அதுவும் சரி .
இப்பவும் ஆயுள் தண்டனை அதே 14 ஆண்டு கால தண்டனை தான ? அப்போ அம்பேதகர் சொன்ன சட்டத்தின் நிலை தான் என்ன ?
 ஒண்ணுமே புரியலையே

முதல் 10 சட்ட திருத்தங்களில் குடியரசு தலைவரின் உரிமைகள் அனைத்தும் பிரதமருக்கு மாற்றி பாராளுமன்றத்தில் வாக்குரிமை பெற்று , அனைத்து முடிவுகளும் பிரதமருக்குதான் என்று மாற்றி விட்டுள்ளார் நேரு .
அதன் பிறகு ஏகப்பட்ட சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
அப்புறம் எதுக்கு அம்பேத்கரை விட்டு சட்டம் எழுத சொன்னாங்க !
இவங்களே எழுதி இருக்கலாமே ?

 ஒண்ணுமே புரியலையே 

ஒவ்வொரு கட்சியும் , வேறொரு கட்சியில் இருந்து பிரிந்து வரும் போது கொள்கை பிடிக்கலைன்னு சொல்லித்தான் வெளியில வருது.
அப்புறம் போய் திரும்பவும் கூட்டணி வச்சிகுதே .


 ஒண்ணுமே புரியலையே


திராவிடர்கள் கட்சிதானே , மது பழக்கம் கெட்ட பழக்கம்ன்னு சொல்லி பனை மரங்களை எல்லாம் அழிசுது . அதுல பெரியார் கூட தன சொந்த பனை மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினார் .
இப்போ மட்டும் எந்த டாஸ்மாக் கடையையும்
இடிக்க மாட்டேங்கிறாங்களே ?

 ஒண்ணுமே புரியலையே 


புராண கதைகளில் கூட பேய் பிசாசு கதைகளே கிடையாது . பூதம் என்று கூறுவார்கள் . அவர்கள் கொஞ்சம் மந்திரம் தெரிந்தவர்கள் என்று கூறினால் கூட நம்ப மறுக்கும் இந்த நவீன காலத்தில் தான் ,

வரிசை வரிசையா , பேய் படங்கள் வருது, அதையும் மக்கள் நம்பி பாக்குறாங்க ! அப்போ இவங்க படிச்சது பொய்யோ ? இல்ல அறிவியலே பொய்யா ?

 ஒண்ணுமே புரியலையே 

அகரம் என்ற அமைப்பின் மூலம் ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பேன்னு சொல்ர நடிகர் சூர்யா  பேய் படத்தில் நடித்ததின்  மூலம் பள்ளி மாணவர்களுக்கு மூட நம்பிக்கையை ஒழிக்க முயற்சி எடுத்தாரோ ?

ஒண்ணுமே புரியலையே 



தமிழ்நாட்டில் தான் ஜாதி வெறி பிடித்தவர்கள் இருந்து , கொடுமை எல்லாம் நடந்துருக்குன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா இப்பவும் தமிழ் நாட்டின் பூர்விக ஜாதி எல்லாமே தாழ்ந்த ஜாதி அட்டவணையிலேயே இருக்குதே !
அப்போ யார் நம்மை கொடுமைபடுத்தினான்களோ , அவங்கதான் இப்பவும் உயர்ந்த ஜாதி அட்டவணையில இருக்கங்களா ?

அப்புறம் இந்த மக்களாட்சி என்னதான் கிழிக்கிது ?



ஒண்ணுமே புரியலையே !


தமிழ்நாட்டின் ஜாதி கொடுமை தாங்க முடியாமதான் ஒரு சிலர் கிருஸ்தவ மதத்திற்கே மாறிட்டு வர்றாங்க லாம் . 
ஆனா உலகத்திலேயே அதிகபடியான ஜாதிகளை கொண்ட ஒரே மதம் கிறிஸ்தவம் தானாம் .!


 ஒண்ணுமே புரியலையே 

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...