நாகர்கள் எனும் பெயரை அடிகடி நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.அனால் யாரும் இவர்கள் யார் என்று பெரிதாக கூறியதில்லை .
புராணங்களை பொறுத்தவரை
ராவணின் இளைய சகோதரன் நாக லோகத்தின் தலைவனாக இருந்தான் என்று ராமாயணம் கூறுகிறது .
மகாபாரததிலோ நாகர்கள் இருந்த இடத்தில்தான் , அவர்களை அழித்து விட்டு இந்திரப்ரஸ்தம் எனும் பாண்டவர்களுக்கான நகரம் உருவாகபடுகிறது .
அதே கதையில்தான் பீமன் சிறுவனாக இருக்கும் பொழுது , துரியோதனன் அவனுக்கு விஷம் கொடுத்து கொன்று நதியில் வீசும் பொழுது , நாகர்களின் தலைவனால் காப்பாற்றபடுகிறான் .
ஆனால் பிற்காலத்தில் நாகர்களை அழித்து தான் இந்திரபிரஸ்தம் கட்டபடுகிறது . ( இன்றைய டெல்லி ) இது நாகர்கள் வாழ்ந்த இடம். நாகர்களின் தலைநகரம் .
பிறகு மகாபாரத யுத்தத்தில் , கர்ணனுக்கு நாகஸ்திரம் கொடுக்கிறான் நாகர்களின் தலைவன் .
கிருஷ்ணா புராணத்தில் சிறுவயதில் கிருஷ்ணன் காளியா எனும் பாம்பை வெல்கிறான் .
கிருஷ்ணனின் அண்ணனாக வரும் பலராமன் முற்பிறவியில் ஆதிஷசன் எனும் பாம்பாக இருந்தவர் என்றும் அப்புராணம் கூறுகிறது .
தேவர்களுக்கு தேவாமிர்தம் எடுக்க உதவியது வாசுகி எனும் பாம்பு.
கார்கோடகன் எனும் பாம்பானது வானிலை அறிந்து கூறக்கூடியது என்றும் புராணங்கள் கூறுகிறது .
முடிந்தவரை பாம்புகள் வாழும் இடம்தான் பாதாள லோஹம் என்றும் நாக லோகம் என்றும் வழங்கப்பட்டுள்ளது .
இவையெல்லாம் நாகர்கள் குறித்து புராணங்கள் கூறுவன .
நாகர்கள் எனப்படுபவர்கள் புராணங்கள் கூறுவது போல் பாம்பு அல்ல.
அவர்களும் மனித இனம்தான் .
இன்றும் நமக்கே தெரியாமல் நாம் சில ஊர் பெயர்களை நாகர்களின் பெயரால்தான் அழைத்து வருகிறோம் .
நாக்பூர்
நாகலாந்து - நாகர் இன பழங்குடி மக்கள்
நாகர்கோவில்
நாகபட்டினம் ( தமிழில் பட்டினம் என்றால் துறைமுகம் என்று அர்த்தம் . நாகபட்டினம் நாகர்களின் துறைமுகம் .)
நாகர்பாவி
நாகர் கிராமம் - ஹிமாச்சல பிரதேஷ் .
இந்த வூர் பெயர்களின் வழியாக நாகர்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது .
அவர்களுகென்று கடலோர நகரம் பட்டினம் என்று அழைக்கப்பட்டுள்ளது .
இன்னும் நாகலாந்து பகுதியில் நாகர் இன மக்கள் வாழ்கிறார்கள் .
இலங்கையின் பலபகுதிகளிலும் , தென் இந்தியாவிலும் நாகர்கள் எனும் இன மக்கள் SC / ST என்ற பிரிவின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள் .
வட இந்தியாவிலும் , நாகர்களுடன் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஆரிய இனம் ஒதுக்கப்பட்ட இனமாக மாற்றப்பட்டுள்ளது .
பிராமணராகவோ , ஆரியன் என்று கூறி கொள்ளவோ தடை செய்ய பட்டுள்ளதாக வோல்கவிளிருந்து கங்கை வரை எனும் புத்தகத்தில் ராகுல் ஜி குறிப்பிடுகிறார் .
நாகர்கள் எனும் மக்கள் யார் ?
நாகர்கள் எனப்படுபவர்கள் அதீத உடல் உறுப்பு கொண்டவர்கள் .
நாகர்களுக்கு மூன்று கண்கள் , ஆறு கைகள் , மூக்கிற்கு பதிலாக யானையின் துதிக்கை , பனிரண்டு கைகள் , இரண்டு தலைகள் என இயல்பாக ஒரு மனிதனுக்கு உள்ள உறுப்புகளை விட அதிக உறுப்புகள் இருக்கும் .
இப்படிதான் நாகர்கள் குறித்து விளக்கம் தருகிறார் நாகர்களின் ரகசியம் எனும் புத்தகத்தின் ஆசிரியர் .
ஆ னால் , இந்த நாகர்கலின் தலைவன்தான் 'தக்ஷகன் 'என்பவன் எனும் கருத்தில் எந்த வித மாற்று கருத்தும் எந்த புராணமும் தரவில்லை .
தக்ஷக் என்றால் தெற்கு பகுதி என்பதும் சமஸ்கிருதமே கூறும் பொருள் .
எனில் தெற்கு பகுதியில் வாழ்ந்த மக்களின் தலைவன்தான் நாகர்களுக்கும் தலைவன் .
தெற்கு பகுதியில் யார் வாழ்ந்தார்கள் . தமிழர்கள் .
இரான் , இராக் பகுதியிலும், பாகிஸ்தானின் ஒரு பகுதியிலும் , இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும் அகழ்வாராட்சி செய்த பொழுது அங்கு 100 கணக்கான எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன .
எந்த ஒரு செயலுக்கும் எதிர்பதம் கூற வேண்டுமாயின் 'அ ' எனும் எழுத்தை இணைத்து கூறும் வழக்கம் கொண்டவர்கள்தான் ஆரியர்கள் .
அப்படிதான் வட மேற்கு பகுதியில் வாழ்ந்தவர்களை அசுரர்கள் என்று கூறி அழித்தனர் .
அசுரர்கள் என்றால் என்ன அர்த்தம் - வீரமற்றவன் .
ஆரியர்கள் , தெய்வ பிறப்பு எனில் வீரம் இல்லாத அசுரர்களை கண்டா பயந்தார்கள் . எனில் யார் வீரம் அற்றவர்கள் ?
ராவணனா அசுரன் .?
வீரமில்லாத அசுரர்களை கொள்வதற்க்கா தெய்வமே , பிறப்பெடுத்து வந்தது .
ஆனால் அங்கு வாழ்ந்த இனம் அசுரர்கள் என கூறி அழிக்கப்பட்டுள்ளனர் .
இதே போல்தான் நாகர்கள் ,இந்தியாவின் எல்லா இடங்களிலும் வாழ்ந்த மற்றொரு தமிழ் மரபு சார்ந்த இனம் .
இந்த இனமும் பாம்புளோடு ஒப்பீடு செய்யப்பட்டு , கொடூர இனம் போல் அடையாளம் தெரிவிக்க படுகிறது .
இந்தியா முழுவதும் , ஒருகாலத்தில் ,குமரி கண்டம் இருந்த காலத்தில் நாவல் மரங்கள் மட்டுமே அதிகம் . அதை கருத்தில் கொண்டே நாவலந்தீவு எனும் பெயரும் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது . இப்பகுதியில் வாழ்ந்த மக்களைத்தான் நாவலர்கள் என்று அழைக்க ஆரம்பித்து நாகர்கள் என்று உரு மாற்றம் பெற்றுள்ளது .
இந்த நாகர் இனத்திற்கு வேறு குனாதீசியங்கள் கொடுப்பதும் ,
இவர்கள் கொடுமைகார்கள் என்று கூறுவதும்
இவுலகில் இருந்து அழிக்க பட வேண்டியவர்கள் என்பதும் இன்று வரை தொடர்கிறது .
பாவம் ஒரு இனத்தை பகுதி பகுதியாக அழிக்க 4000 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது தேவர் இனத்திற்கு . இவர்கள்தான் உயர்சாதியினரா ?
No comments:
Post a Comment