Monday, 15 February 2016

வேளாண்மை அறிவோம் - நம்மாழ்வார்


சமீபகாலமாக ஏகப்பட்ட குளறுபடிகள்.
விவசாயிகளை முன்வைத்து ,
அவர்களின் அறியாமையை பயன்படுத்தி ,
நாட்டை சூறையாடும் திட்டங்கள்.
அரசும் அறியாமையால் செய்கிறது என்று வைத்து கொண்டால் கூட அறிவியலில் நாம் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல .
வேளாண் விஞ்ஞானம் என்பது படிப்பறிவில்லாத பாமரனும் அறிந்ததே !
இருந்தும் துணிந்து தவறுகள் நடகிறது என்றால் , நம் படிப்பறிவு எங்கோ ,தவறு செய்திருக்கிறது என்று அர்த்தம் .!





விவசாயிக்கான அடையாளங்களை , அவமானபடுத்தியது முதல் அவர்களுக்கான அங்கீகாரத்தையும் கொடுக்க தவறியது  வரை !
இதன் விளைவு அவர்களுக்குள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையை பயன்படுத்தி கொண்ட அன்னியர்கள் .அவர்களுக்கு கைகூலியாக வேலை பார்த்த அரசும் , அரசு ஊழியர்களும் கிட்டதட்ட வேளாண்மை என்பது அழிந்தால் பரவாஇல்லை என்று கூறும் இடத்திற்கு வந்து விட்டார்கள் .

இதிலிருந்து விடுபட இன்று பற்பல இயக்கங்கள் உருவாகி , மீண்டும் வேளாண்மை வழிசெல்ல , நமக்கு துணை புரிய தயாராய் இருக்கின்றன .

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக  இருந்து வழிகாட்டிய திரு.நம்மாழ்வார் அவர்கள் வேளாண்மை குறித்து கூறிய கருத்துகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன .

வேளாண்மை செய்யாவிட்டாலும் வேளாண்மை குறித்த அறிவை பெற வேண்டிய அவசியத்திற்கு இன்று வந்துவிட்டோம் .

பயிர்களின் வகைகள் :

பாரம்பரிய வேளாண்மை பிரிவுகள்

குறுவை , சம்பா , மற்றும் தாளடி பயிர்கள் .

தாளடி பயிர்கள் ஒரு ஆள் உயரத்திற்கு வளர கூடியது .

90 நாள் பாரம்பரிய ரகங்கள் கருங்குறுவை , செங்குறுவை

60 நாள் பயிர் அறுபதாம் குறுவை

நீண்ட நாள் பயிர் கிச்சடி சம்பா,, சீரகசம்பா

கடல் நீர் சேரும் கடற்கரை பகுதியில் விளைவன : குழியடிச்சான் , குடைவாழை

நீர் குறைந்த பகுதிக்கு ஏற்றது வாடன்சம்பா , மாப்பிள்ளை சம்பா, புழுதி விரட்டி , ஒசக்குதாளை

நெய்வேலி காட்டாமணக்கை வெட்டி வாழை மட்டையில் போட்டால் எந்த உரமும் இல்லாமல் பயிர் விளையும்.


வேளாண்மையின் முக்கிய தருணங்கள் :


புதுக்கோட்டை மாவட்டம் வீரபட்டியில் சக்திகணபதி என்பவர்  வயிலில் மீன் வளர்கிறார் .  வயலில் மீன் வளர்த்தால் , மீனின் கழிவுகள் , உரமாகவும் , மீன்கள் அங்குள்ள பூச்சிகள் உண்பதால் அது சிறந்த பூச்சி கொல்லியாகவும் பயன்படும் .
அதே நேரம் மீன் விவசாயம் சிறந்த பலன் தரும் .

இந்திய வேளாண்மை மிக சிறந்த வேளாண்மை முறை  என்று  பாராட்டிய ஆங்கிலேயர்
ஜான் அகஸ்டஸ் வோல்கர்
மற்றொருவர் ஆல்பர்ட் ஒவார்ட்

இன்று அந்த சிறந்த வேளாண்மையைதான் தான் தேடி கொண்டிருக்கிறோம் .

---------------தொடர்வோம் 

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...