முன்னொரு காலத்தில் , இப்படித்தான் தொடங்க வேண்டும் .
ஆசிரியர்களை குரு என்று அழைத்தோம். காரணம் , அவர் மாணவர்களுக்கு என்ன போதித்தாரோ அப்படிதான் வாழ்ந்தார் . அது ஒரு அழகிய நிலா காலம் என்றும் சொல்ல முடியாது . அப்போது ஜாதிய வேறுபாடுகள் கல்வியை அனைவருக்கும் கொடுக்க தடை விதித்தது .
ஆனால் கல்வி தரம் வாய்ந்தது .
இடைக்காலத்தில் , ஆசிரியர்கள் நடத்துவது போல் வாழ முடியா விட்டாலும் , இது நல்லது , இது கெட்டது என்பதை மட்டும் சொல்லி தந்தார்கள் . பிறகு புத்தகத்தில் உள்ளவற்றிற்கு விளக்கம் மட்டும் கொடுப்பதே ஆசிரியரின் வேலை யாகி போனது . இது மாணவர்களுக்கு ரெண்டும் கெட்டான் நிலை .
ஆனால் இன்று ஆசிரியர்கள் என்றால் ,
வாய் நிறைய லிப்ஸ்டிக் .
ப்லோடிங் புடவை
புரிந்து கொள்ள முடியாத இங்கிலீஷ் , அவர்களுக்கும் பாதி நேரம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரிவதில்லை .
கொஞ்சம் நேரம் டைரி எழுதனும் . இது பெத்தவங்களுக்கு அவங்க குடுக்கிற evidence
வாரத்திற்கு ஒரு நாள் ஒரு விழா நடத்தனும் . ஆடனும்,பாடனும் .
பாடம் நடத்துறோமா , இல்லையா , இதெல்லாம் பிரச்சனையே இல்லை
எந்த பெற்றோரும் சந்தேக பட கூடாது . இது ஒன்னு தான் அவர்களுக்கு.
வேலை .
குருக்கள் பணத்தை விட கெளரவம் முக்கியம்னு நினைச்சாங்க !
அப்புறம் கொஞ்சம் பணத்திற்கும்,கொஞ்சம் கௌரவத்திற்கும் இடையில் போராடினாங்க !
இப்பவெல்லாம் நேரடியாவே சொல்றாங்க , இதுவும் ஒரு corporate தான் என்று !
சரி விட்டுவிடலாம்னு பார்த்த , இவங்க நடத்துற இங்கிலீஷ் , ரொம்ப புதுமையாதான் இருக்கு
நம்மெல்லாம் A for Apple ன்னு படிச்சோம் .
அப்போ நடத்துன இந்த அகர வரிசையானது பெயர்ச்சொல் சார்ந்தது .
அது பொருட்பெயராகவும் இருக்கும்.
அங்கு வினைபெயராகவோ , அல்லது சினைபெயரகவோ, தொழில் பெயராகவோ இருக்காது .
ஆனா இப்போ எந்த இலக்கணமும் இல்லை , புதுமையா நடத்துறோம் என்ற பெயரில் , A for Arm என்றும் , F for fin ,S for sap என்றும் நடத்துறாங்க !
இந்த Sap அப்புடின்ன என்ன அப்புடின்னு பார்த்த ஒரு இலையை செடியில் இருந்து பிடுங்கும் பொது சொட்டும் ஒரு சொட்டு பால் போன்ற திரவம் .
இது 4 வயது 5 வயது குழந்தை புரிந்து கொள்கிறதா என்பது போன்ற கவலையெல்லாம் corporat க்கு கிடியாதாம் .
இது கூட பரவாஇல்லை , குழந்தைகளை Ward என்று அழைக்கிறார்கள் .
காரணம் கேட்டால் வார்ட் என்றால் குழந்தை என்று அர்த்தம் . மேல் நாடுகளில் இப்படிதான் குழந்தைகளை அழைக்கும் வழக்கம் உள்ளது என்று கூறுகிறார் nursery பள்ளியின் ஆசிரியர் .
உண்மையில் வார்ட் என்றால் , ஒரு குறிப்பிட்ட இடம் என்று பொருள் . அந்த இடம் சார்ந்து அந்த பெயரை ,
வார்டு கவுன்சிலர் என்றும்
வார்ட் நோயாளி என்றும் ,
வார்ட் கைதி என்றும் அழைக்கலாம் .
மேலை நாடுகளில் , ஒரு குழந்தையை , அதன் பெற்றோர் வளர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் , சட்ட ரீதியாக , நீதி துறையின் வாயிலாக ஒருவரை நியமித்து , அவர் வழியாக கண்காணிக்க படும் குழந்தையை வார்டு என்று அழைப்பர் .
அப்படி ஒரு குழந்தை அழைக்கபடுமாயின் அக்குழந்தை , சட்டத்தின் பாதுகாப்பில் உள்ளது என்று பொருள் . ரொம்ப கொடுமை , இப்படி ஆசிரியர்கள் அழைப்பதை பெற்றோரும் ஒப்புகொள்வது .
இதுதான் புதுமையா ?
குழந்தையை பார்த்து , நீ நன்றாக சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பாய் என்று கூறுவதை , முன்பெல்லாம் healthy ஆக இருக்கணும் என்று சொல்லி கொடுத்தார்கள் . இப்போ சொல்லி தருவது hu nk ஆக இருக்கணும் .
இந்த hunk என்பதன் பொருள் கட்டுமஸ்தான , கவர்ச்சியான ஆண் என்பது .
ஆரோக்கியமான உடலை பற்றி இப்போது பிரச்னை இல்லை
ஆசிரியர்களுக்கு .
கவர்ச்சியான ஆணாக வளர கூறுவதும் ,
சிறு சிறு விஷயங்களில் கூட சிறப்பு என்பதற்கு Exclusive என்பன போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதும் , கொஞ்சம் தவறான கல்விக்கு அடிப்படை தருகிறது .
இந்த புதுமை என்ற பெயரில் , மாற்று வார்த்தைகள் பயன்படுத்துவதை தடுக்க வழி தேடினாலும் , இது போன்ற பள்ளிகளில் படிக்க வைக்காமல் இருப்பதே நலம் என்று தோன்றுகிறது .
ஆனால் இதை பெற்றோர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும், இது பெற்றோர்களில் கௌரவத்திற்கு இழுக்கு என்றும், corporate பள்ளிகள் உறுதியாக நம்புகின்றன.
இன்றைய கல்வியானது , பெற்றோர்களின் கௌரவத்திற்கும்,
பள்ளிகளின் லாபத்திற்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகிறது .
யாருக்கும் குழந்தைகளின் கல்வி மீது அக்கறை இல்லை .
படிக்காத பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தைகள் டியூஷன் அனுப்புவது கிடையாது .
ஆனால் படித்த தாய்மார்கள் அத்தனைபேரும் தங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவதே இல்லை .
வெறும் சைக்கிள் மட்டுமே வைத்திருக்கும் அப்பாக்கள் கூட , தன குழந்தையை ஸ்கூல் வேனில் அனுப்பதில்லை . ஆனால் பைக் வைத்திருக்கும் எல்லா அப்பாக்களும் , ஸ்கூல் வேனில் தான் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் .காரணம் ஸ்கூல் 10 km தள்ளி இருக்கிறது . பைக்கில் சென்று வருவது அப்பாவிற்கே பிடிக்க வில்லை . அதை எப்படி குழந்தையின் உடலும், மனமும் ஏற்கும் என்பதை பற்றி பெற்ற தகப்பனுக்கே அக்கறை இல்லை .
7 அல்லது 8 km தள்ளி போய் படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் , உண்பதை எல்லாம் விட்டுவிட்டாலும் சரியாக , கழிவு வெளியேற்ற முடியாத அவசரத்திற்கு தள்ள படுகிறது .
எவ்வளவு உனக்கு கஷ்டம் வந்தாலும் , அது குறித்து கவலை இல்லை , எனக்கு என்னுடைய கௌரவம்தான் முக்கியம் என்று என்னும் தாயும் , தகப்பனும் இருக்கும் வரை , corporate பள்ளிகள் லாபத்திற்காக இன்னும் பல புதுமையான பாடங்களை நடத்தி கொண்டுதான் இருக்கும் .

No comments:
Post a Comment