Thursday, 27 May 2021

மேற்கத்திய சந்திரமுகி

 மருத்துவமனை செவிலியர்கள் பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் , இஞ்சி இவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து , வடிகட்டி குடியுங்க என்று கூறி விட்டார்களாம் . இவையெல்லாம் வாட்சப் forward msg கள் . இவற்றையெல்லாம் செவிலியர்கள் கூறுகிறார்கள் என்று பலரும்  கோபத்துடன் பதிவு செய்கிறார்கள் முகநூலில்! .

போற போக்கை பார்த்தால் , இனி மருத்துவர்கள் , செவிலியர்கள் மனம் மாறி உள்ளூர் காய்கறிகள் ,கீரைகள் உண்ணுங்கள் என்று கூறி விட்டால் கூட , அதையும் குற்றம் கூறுவார்களோ ! 

முற்றுலும் மேற்கத்திய சந்திரமுகியாக மாறி வருகிறது போல இந்த சமூகம் !




கொரோனா ஆய்வு தகவல்கள் வரவில்லையே ஏன் ?

 கொரோனா ஆய்வு தகவல்கள் வரவில்லையே ஏன் ?


2019 இறுதி முதல் கொரோன இந்த  உலகையே ஆட்டி படைக்கிறதாம் . இருந்தும் என்ன பயன் ?

இது யாரையெல்லாம் பாதிக்கிறது ?

இது வரை இறந்தவர்கள் ஏற்கெனவே நுரையீரல் நோயாளிகளா ?இல்லை திடீரென பாதிக்கிறதா ?

இது வரை இறந்தவர்களுக்கு ஏதேனும் பொதுவாக ஒத்து போக கூட பழக்கங்கள் உள்ளதா ?

இது வரை நோய் தொற்றுக்கு ஆளானவர்களில் ஆண்கள் அதிகமா ? பெண்கள் அதிகமா ? வயது என்ன ?

அவர்களின் உணவு பழக்கங்கள் ஏனெனென்ன ?

மது பழக்கம் கொண்டோர் எத்தனை பேர் ? புகை பழக்கம் உள்ளோர் எத்தனை பேர் ?

இவர்களையெல்லாம் பாதிக்கிறதா ? அல்லது எந்த குடிப்பழக்கமும் இல்லாதவர்களை அதிகம் பாதிக்கிறதா ?

இதுவரை எந்த மாதிரியான காலநிலையில் 

இந்த பாதிப்புகள் அதிகம் உள்ளன ?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கிறதா ? 

இது நாள் வரை ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் , உடலில் நோய் எதிர்ப்பு திறன் இருக்காது என்று கூறி வந்த இந்த அறிவியல் உலகம் திடீரென வயது முதிர்ந்தோருக்கு தடுப்பூசி பரிந்துரைக்கிறதே ? இப்போது மட்டும் எதிர்ப்பு திறன் வளர்ந்து விடுமா ?


ஏன் எந்த தகவல் தொகுப்பும் இந்த உலகம் இது வரை தொகுக்கவே இல்லை .இரெண்டு ஆண்டுகள் ஆக போகிறது .கொரோன சண்டை ஆரம்பித்து !

இனிமேலாவது தொகுப்பார்களா ?


காவேரி வாழ்க !

இப்படி ஒரு வழி காட்டிய  , வருங்கால தலைமுறையை எண்ணி கவலை கொண்டு உருவாக்கிய அரசு, மற்றும் அதிகாரிகள் அத்தனை பேரையும் வாழ்த்தியே ஆகணும் ! இந்த வாழ்த்தில் நிகழ்கால அரசு,கடந்த கால அரசு என்றெல்லாம் இல்லை . அனைவருக்கும் பங்குண்டு என்பதால் , அனைவருக்குமே வாழ்த்துக்கள் போய் சேரட்டும் !

காவேரி வாழ்க !

நிலத்தடி நீர் சேமிப்பு மீது  அக்கறை கொண்டவர்கள் அரசும் ! அதிகாரிகளும் !



Wednesday, 26 May 2021

மதுவந்தி - ஒரு மாநிலத்தில் ஆளுநராக !

 

ஆரியம் vs திராவிடம் 


நாள்: 27.5.20021 - வியாழக்கிழமை 

இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்கள் முழுக்க ஒரு பள்ளியும் அதன் உரிமையாளரும் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உட்பட்டு எழுதப்படுகிறார்கள் .
அந்த பள்ளியின் ,வணிகவியல் ஆசிரியர் இணைய வழி வகுப்பில் ஒரு மாணவியிடம் தவறாக ,புலன வழியில் குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார் . அதை அடிப்படையாக கொண்டு தான் பிரச்னை!
அந்த ஆசிரியர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து விட்டது.

அந்த பள்ளியின் பெயர் பத்மா சேஷாத்ரி பள்ளி ,சென்னை
அதன் உரிமையாளர்கள் : நடிகர்: ஒய் .ஜி .மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தி . 
              
இந்த சமூகம் விழித்து கொண்டது.எல்லாவற்றிக்கும் போராட ஆரம்பித்து விட்டது .எனவே உடனுக்குடன் நீதி கிடைத்து விடும் என்றெல்லாம் எண்ணி விட்டால் , நம் அறிவிற்கு சில விஷயங்கள் இன்றும் புரிய வில்லை என்றே அர்த்தம் !



நம் அன்றாட வாழ்வில் நாம் செய்து வரும் மிக முக்கிய விஷயம் .
எப்போதும் தொலைக்காட்சிகளில் அல்லது நேரிலோ கூட மானை புலி துரத்தினால் ,மானுக்காகவே பரிந்து பேசுவோம் . புலியை திட்டி தீர்த்துவிடுவோம்.
மான் தப்பித்து விட்டால் , மனம் திருப்தி அடைந்து விடும் . பிறகு நாம் கோழியோ,ஆட்டையோ அடித்து உண்போம் .இது தான் உலக வழக்கும் கூட !

இது என்ன மனநிலை ? நம்மிடம் இரக்க குணம் உண்டு என்றெல்லாம் நாம் அலட்டி கொள்ள கூடாது .
வனவிலங்கு சட்டம் 1972 க்கு முன்பு வரை 
எல்லோரும் மான் கறி உண்டவர்கள் தான் !மானின் எண்ணிக்கை குறைந்து விட்டது ,பிறகு மான் பாவம் என்ற போதனைக்கு ஆட்பட்டது .

இப்போ கதைக்கு வருவோம். இதை உளவியல் எப்படி கூறுகிறது என்றால் , இந்த சட்டம் வரவில்லை என்றாலும் நாம் மானுக்காகதான்  பேசி இருப்போம் . ஏனெனில் நமக்கு எதிரி , உணவு எதிரி தான் புலி  !
அதனால் நாம் புலியை விரட்டுவதில் எந்த தவறும் இல்லை . என்றே கூறுகிறது .


அப்படித்தான் , இந்த பள்ளிக்கூட விஷயத்திலும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது .இங்கு யாரும் அந்த பெண்ணிற்காக பேசவே இல்லை . மாறாக அதன் உரிமையாளரை எப்படியெல்லாம் பேச வேண்டுமோ ,அப்படியெல்லாம் பேசுகிறார்கள் .

பிறகு தான் அடிப்படை புரிந்தது . பள்ளியின் உரிமையாளர்கள் பிராமண சமூகம் . திட்டுபவர்கள் எல்லாம் திராவிடம் !
எனில் இந்த சண்டை நியாயம் தானே !

இங்கு நல்லது செய்து பெயர் வாங்குவது கடினம் .ஆனால் அல்லது செய்து விளம்பரமாவது மிகச் சுலபம்!
திட்டி திட்டியே ஒருவருக்கொருவர் விளம்பரம் கொடுப்பதில் வல்லவர்கள் ஆரியம் மற்றும் திராவிடர்கள் ! 

பொள்ளாச்சி பிரச்னை நடந்தது ,அதில் சம்மந்தப்பட்டவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள் !
நிர்மலா தேவி என்ற பெண் பேராசிரியர் , பெரும் புள்ளிகளுக்காக கல்லூரி மாணவிகளை அனுப்பி வைக்கும் தரகர் வேலை பார்த்தார் . என்ன நீதி கிடைத்து விட்டது . இங்கு யார் தண்டிக்கப்பட்டார்கள் .எதுவும் இல்லை.
காசி என்ற கயவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சனையின் தீர்வு என்ன ?

எதுவும் இல்லை !
மாறாக இவர்களெல்லாம் பிரபலமானார்கள் என்பது மட்டுமே உண்மை !நாளையே காசி தேர்தலில் நின்றால்  கூட வெற்றி பெற்று விடுவான் .

ஏனெனில் மக்களுக்கு நல்லது , அல்லது இரண்டிற்கும் இடையில் நினைவில் இருக்கும் பெயருக்கு மட்டும் தான் வாக்களிப்பார்கள் .

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ,மதுவந்தி என்பவரை யாருக்கும் தெரியாது .
தமிழிசை சௌந்தர்ராஜன் , தெலுங்கானா ஆளுநர் ஆவதற்கு முன்பு வரை மதுவந்தி வெளியில் பெரிதாக பேசப்பட்டதே இல்லை . ஆனால் , தவறாக பேசுவது , அதற்கான விமர்சனங்கள் என்று எதிர்மறை விளம்பரங்கள் மூலம் , மிக விரைவில் விளம்பரமாகி விட்டார் .

எதிர்பார்ப்போம் விரைவில் , மதுவந்தி ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆளுநராக !
அது வரையில் ஆரிய , திராவிட சண்டை என்ற பெயரில் விளம்பரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் !

அப்போ நாம் என்ன செய்வது ?
எப்போதும் போலத்தான் வேடிக்கை பாப்போம் !





Monday, 24 May 2021

அறிவாளிகள்

 தமிழ் மருத்துவத்தில் 3நாள் பத்தியம் என்ற உடன் ,வேண்டாம் என்று கூறிய இந்த அறிவு தான்,வாழும் காலம் வரை சர்க்கரை,உப்பு சேர்க்காதே என்று கூறியவுடன் ஏற்றுக்கொள்கிறது!    முரண்!


வடஇந்தியாவை எப்போதும் எதிர்க்கிறோம் !ஏன்?

அவர்கள் வோல்காவில் இருந்து வந்தவர்கள் !அவர்களை நாம் மதிக்க கூடாது.

சரி தான் !ஆனால்,

நாம் மட்டும் என்னவாம் ,

நாம் அந்த பக்கம் போகாமல் ,இந்த பக்கமாக அதே வோல்கோ நதிக்கரை மேற்கத்தியதை பின்பற்றுவோம்!

நாம் உண்மையிலேயே அறிவாளிகள் தான் !எப்படியெல்லாம் நாம் ஆரியத்தை எதிர்க்கிறோம்!பெருமை!


தமிழ் வானியல் வேண்டாம் !

தமிழ் மருத்துவம் வேண்டாம்!

தமிழ் அறிவியல் வேண்டாம் !

தமிழ் மக்களும் வேண்டாம் !

ஆனாலும் தமிழ் வாழ்க!

யாருக்காக ?



வீண் வேலை

 பேசும்போது மட்டும் தமிழ் தமிழ் என்று உரக்க பேசுவது .ஆனால் செயல் என்று வந்தால் தமிழ் மருத்துவதையோ ,தமிழ் அறிவியலையோ மதிப்பதே இல்லை.

உடனே ஓடி போய் தடுப்பூசி போடுவது!என்ன தமிழ் அறிஞர்களோ !இந்த லட்சணத்தில் தமிழ் வளர்ந்து விடுமாம்!

தமிழ் மக்களையே நம்ப வில்லையாம்!இவர்கள் எல்லாம் தமிழை மட்டும் காப்பாற்றுகிறார்களாம் !வேடிக்கை தான்!

தமிழின் அறிவியலை ,மருத்துவத்தை சமைத்தல் என்னும் உருவாகும் நிலைக்கு உருவாக்காமல்,ஆண்டாண்டு காலமாய்,சமஸ்கிருதம் எனும் கல் பொறுக்கும் வேலைக்கு மட்டுமே பயன்படுத்தும்  தமிழ் ஆய்வாளர்கள் ,தமிழ் மருத்துவத்தையும் வளர்ப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை தான்!


Sunday, 23 May 2021

கொரோன பற்றி பேசும் போது நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

 கொரோன பற்றி பேசும் போது நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் 


1. இது நுரையீரலை பாதிக்கும் நோய் .

எனில் ஏற்கெனவே, அதாவது காரோண வருவதற்கு முன்பே  நுரையீரல் பாதிப்புக்கு ஆட்பட்டவர்கள் இந்தியாவில் மொத்தம் எத்தனை பேர் ?

5 கோடியே 80 லட்சம் பேர் 

----

2. அதிகம் கொரோனவால் பாதிக்கப்பட்ட மாநிலம் எது ? அந்த மாநிலத்தில் ஏற்கெனவே நுரையீரல் நோயாளிகள் எவ்வளவு பேர் ?


மஹாராஷ்டிரா, உத்தரபிரதேஷ் , சத்தீஸ்கர், டெல்லி, போன்ற மாநிலங்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் .

இந்தியாவில் அதிக அளவில் கொரோனாவிற்கு முன்பே நுரையீரல் நோயாளிகளை கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியல் 

https://timesofindia.indiatimes.com/india/tb-still-a-bigger-killer-than-covid-in-india/articleshow/76602706.cms


Uttar Pradesh
In 2019, Uttar Pradesh had the highest share of tuberculosis notifications in India with 20 percent. Maharashtra and Madhya Pradesh followed with relatively lower notification rates with nine and eight percent, respectively.11-Mar-2021
இந்தியாவில் அதிக அளவில் கொரோனாவிற்கு முன்பே நுரையீரல் நோயாளிகளை கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் பெறுவதும் உத்தர பிரதேசம் தான் .
-----
3. அதிகம் கொரோனவால்  பாதிக்கப்பட்ட மாநிலங்களில் காற்று மாசு அடைந்த மாநிலங்கள் எவை எவை ?
சந்தேகம் இல்லாமல் உத்தரபிரதேசம் .
பிறகு மூச்சு பிரச்னை வரமால் வேறென்ன செய்யும் ?
---
4. கொரோனவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள தொழிற் சாலைகளின் எண்ணிக்கை ?
அதனால் ஏற்படும் காற்று மாசு , நீர் மாசு மற்றும் மண் மாசு .
இதற்கு பதில் கூறமாட்டோம் . ஏனெனில் பழியை தான் கொரோன மீது போடமுடியும் . தொழிற்சாலைகள் மீது கூற யாருக்கும் முடியாத காரியம் .
--
5. அவரவர் வாழும் சூழல் மற்றும் உண்ணும் உணவு, வறுமை , புகை பழக்கங்கள் மற்றும் மது பழக்கம்.
கருப்பு பூஞ்சை வந்தால் கண் பார்வை மங்கும் . ஆமாம் அதீத மது பிரியர்களுக்கும் , உடலில் வைட்டமின் A சத்து குறைந்தவர்களுக்கு கண் பார்வை மங்கத்தான் செய்யும் .
வெள்ளை பூஞ்சை நோய் ஏற்பட்டால் குடல் பாதிக்கப்படும் . மது குடித்தவர்கள் குடல் எல்லாம் ஏற்கெனவே அழுகித்தான் இருக்கும் .

எனவே அச்சம் தவிர்ப்போம் ! 
வாழ்க வளமுடன் !







கொரோனாவின் கணக்கு வழக்கு

 கொரோனாவின் கணக்கு வழக்கு 


இன்று 24.5.2.21 வரை மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கள் கொரோனவால் உயிர் இழந்துள்ளதாக செய்தி தாள்கள் கூறுகின்றன .

இதன் காரணமாக மேலும் அதீத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .


வணிகவியல் பாடத்தில் ஒரு பகுதி உண்டு . அதாவது , ஒரு நிறுவனத்தின் லாபம் மற்றும் நட்டம் என்பதை மட்டும் தான் கணக்கியல் வழியாக கணக்கிட்டு கூற முடியும். அதில் காரணங்கள் என்ன என்பது இடம் பெறுவதே இல்லை . இதனால் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஊழியர்களிடையே ஏற்படும் சண்டை , சமாதானம் எதுவும் வெளியில் தெரியாது . ஆனால் லாபமும், நட்டமும் அங்குள்ள தொழிலாளர்களின் ஒற்றுமையை அடிப்படியாக கொண்டது . இவை எந்த கணக்கிலும் இது பதிவு செய்யப்படுவது இல்லை . நிறுவனர் அல்லது பங்குதாரர் திறமைசாலியாக இருந்து , இதை ஆய்வு செய்து விட்டால் லாபம் தொடரும், நட்டம் குறையும் . ஒரு வேளை , அவர் கவனிக்க தவறி விட்டால் விரைவில் நிறுவனம் மூடப்படும் .

எனவே வெறும் கணக்கு வழக்கு என்பது ஒரு நிறுவன தொடர் வளர்ச்சியை அல்லது தொடர் நட்டத்தை விளக்காது .

இது கொரோனாவிற்கும் பொருந்தும் !

உலகம் முழுவதுமே , கொரோன இறப்பு என்று தினம் ஒரு பட்டியல் வாசிக்கப்படுகிறது .ஆனால் அங்கு 

உள்ள காற்று மாசு 

நீர் மாசு , மண் மாசு , மக்களின் வாழ்க்கை முறை , உணவு பழக்கவழக்கம் , புகைபிடித்தல் , ஏற்கெனவே நுரையீரல் நோயாளிகள் என்றெல்லாம் பல்வேறு விஷயங்கள் மறைக்கப்படுகிறது .அல்லது கணக்கில் கூறப்படுவது இல்லை .

ஏன் என்பது தெரியவில்லை .

இந்தியாவில் , ஏற்கெனவே நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 5 கொடியே 80 லட்சம் பேர் . இன்று வரை இறந்தவர்கள் வெறும் 3 லட்சம் பேர் தான் !

அதே சமயம் ,

மருத்துவர்கள் ஒரு நோயாளியை அனுமதிக்கும் போதே நோயாளியின் history எழுதிய பிறகு தான் நோயிற்கான மருந்தையே கொடுக்க முடியும் எனும் போது , ஏன் மருத்துவ துறையில் கூட இறந்தவர்களில் இத்தனை பேர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் என்று கூற முடியவில்லை .

மருத்துவ தர்மம் தடுக்கிறதா ?

இதை தனித்தனி எடுத்து கூறி மக்களின் அச்சத்தை போக்க வேண்டிய கடமை பத்திரிகையாளர்களுக்கு இல்லையா ? பத்திரிக்கை தருமம் தடுக்கிறதா ?

இங்கு ஜாதியை பற்றி கூட பேசி கொண்டே இருக்கும் எழுத்தாளர்கள் , மக்களின் அச்சத்தை போக்க எழுதுவது இல்லை . எழுத்து தர்மம் தடுக்கிறது .

இந்தியா தலை சிறந்த மருத்துவர்களையும் , எழுத்தாளர்களையும் கொண்டு உள்ளது .

ஆனால் ,ஏனோ மௌனம் சாதிக்கப்படுகிறது .

இந்த கணக்கு வழக்கு பார்க்காமல் இருப்பது சரிதானா ?




https://scroll.in/latest/991807/coronavirus-180-people-have-died-after-vaccination-in-india-till-march-29

Saturday, 22 May 2021

எங்கெல்லாம் கொரோன அதிகம் உள்ளது ?

 எங்கெல்லாம் கொரோன அதிகம் உள்ளது ?




தமிழகத்தில் எங்கெல்லாம் கொரோன அதிகமாக உள்ளது?

கிட்டத்தட்ட 8 மாவட்டங்களில் கொரோன பரவல் அதிகமாக உள்ளது.

சென்னை,கோவை,சேலம்,திருப்பூர்,திருச்சி,கன்னியாகுமரி,தூத்துக்குடி,

மதுரை.

ஏன் இங்கெல்லாம் அதிக பரவல் உள்ளது ?

ஒரே வார்த்தையில் கூறி விடலாம்.

இங்கெல்லாம்  காற்று மாசு ஏற்பட்டுவிட்டது .இங்கெல்லாம் விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கையை விட,தொழில் துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகம்.விவசாயம் செய்வது மனதில் தரும் அமைதியை,தொழில்துறைகள்  தருவதும் இல்லை,காற்று தூய்மையாகவும் உள்ளது.

இங்கெல்லாம் கல்வி நிலையங்கள் அதிகம்.கற்றோர் என்ற பெயரில் விழிப்புணர்வு என்ற பெயரில் அச்சம் அதிகம் விதைக்கப்பட்டு விட்டது .

நம்மை சுற்றி நிகழ்வதை பகுத்து ,ஏற்றுக்கொள்ள பழகிவிட்டால்நோய் விலகி ஓடி விடும்.





உங்களுக்கு கொரோனா அச்சம் அதிகமாக உள்ளதா ?

 உங்களுக்கு கொரோனா அச்சம் அதிகமாக உள்ளதா ?


காரணம் தேடுவோம் ,

1.நீங்கள் அதிகம் படித்தவர் 


2.உங்கள் வீட்டில் அனைவரும் அதிகம் மேற்கத்திய கல்வியில் ஊறி போனவர்கள் .

3.உங்கள் வீட்டின் அருகில் சுகாதார மையம் அல்லது மருத்துவமனை உள்ளது.


4.உங்கள் வீட்டின் அருகில் செவிலியருக்கு படித்தவர்கள்,செவிலியர் பணியில் உள்ளவர்கள்,மருத்துவமனை ஊழியர்கள் உள்ளனர்.


5.உங்கள் நண்பர்கள் வீட்டில் உள்ளவர்கள் மருத்துவத்துறையில் பணியில் இருப்பவர்கள் .


6.நீங்கள் அதிகம் செய்தி தாள்கள் படிப்பவர் அல்லது தொலைக்காட்சி முன்னாலேயே அமர்ந்து இருப்பவர்கள் .


7.உங்கள் வீட்டில் அல்லது அருகில் ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் உள்ளனர் .


8.நீங்கள் ஏற்கெனவே சிறந்த அறிவாளி என்றும் நன்கு கற்றவர் என்றும் பிறரால் புகழ்ச்சிக்கு ஆளானவர்கள் .


9.உங்கள் உறவினர்கள் யாரவது  இறந்து இருப்பார்கள்.ஏற்கெனவே நோய்வாய் பட்டு இறந்தவர்களை கூட கொரோன சுமக்கிறது .எய்ட்ஸ் வந்து இறந்தால் கூட இப்போது அது கொரோன தான்.


இது உளவியல் அடிப்படியில் உங்களை வாட்டும் விஷயங்கள்!

அதே சமயம் ,

உடலியல் ரீதியாக,உங்களுக்கு மூலம் எனப்படும் மலப்பிரச்சனை நோய் இருந்தால் ,இயல்பாக உங்கள் உடலில் கோழை எனும் சளி உறைந்து விட்டது என்று பொருள்!

கோழை என்றால்,நெஞ்சுக்கூட்டில் சளி படிந்து கூடு சுருங்குகிறது என்று பொருள் !

நீர்சத்து பற்றாக்குறையும் ,இரும்பு சத்து பற்றாக்குறையும் உள்ளது என்றும் பொருள்!இதை அதிகரித்தால் இயல்பாக பயம் உங்களை விட்டு விலகும்!




10.உங்கள் பிள்ளைகள் அல்லது உறவினர் யாரோ சிங்கப்பூர் ,அமெரிக்காவில் வாழ்கிறார்கள் அவர்கள் உங்களிடம் அலைபேசியில் அதைசெய்,இதை செய் என்று கூறி கொண்டே இருக்கிறார்கள் .

Zombie ---கொரோனா

 Zombie என்றொரு தலைப்பில் பல திரைப்படங்கள் வந்துள்ளன்ன.தமிழில் கூட நடிகர் ஜெயம் ரவி நடித்து இருப்பார் .அதன் மைய கருத்து ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுவது .அதனால் மனிதர்கள் அழிவது .ஒரு புரிதலுக்காக இதை இங்கே கூற வேண்டியுள்ளது.

இது கொரோனாவிற்கு பொருந்துமா என்பதை அவரவர் கருத்துக்கே விட்டு விடுவோம்.

மேலும் கீழே உள்ள கருத்து புரிதலை ஏற்படுத்தும் என்றால் ,அது தான் கொரோனா அழிவின் முதல் வழி .அதே சமயம் நம்ம ஊர்களில் ஒரு கருத்து வழக்கில் உண்டு.மூக்கு உள்ளவரை சளி அழிந்து  போகாது !உறவுமுறைகள் என்றுமே அழியாது என்பதற்காக கூறப்படும் பேச்சு வழக்கு இது !ஆனால் அதன் அடிப்படை சளி என்பதற்கு எதிர்ப்புத்திறனை உருவாக்கி கொண்டு வாழ்வதே தீர்வாகும் .ஏனெனில் அதை அழிக்க இயலாது .





https://kreately.in/covid-19-vaccines-are-creating-variants-explains-nobel-prize-winner-french-virologist-luc-montagnier/

தீர்வு தேடும் கொரோன எனும் இடியாப்ப சிக்கல்

 மருந்தே இல்லை என்றால் அதன் பெயர் மருத்துவமே அல்ல !ஆனால் அதே இடத்திற்கு எல்லோரும் வர வேண்டும் என்றால் அங்கு Trial and Error முறையில் பரிசோதனைக்குள் வர எல்லோரும் எலிக்குட்டிகளும் அல்ல !

மனசாட்சி உள்ள ஆங்கில மருத்துவர்களும் இங்கு வாழத்தான் செய்கிறார்கள் .ஆனால்,ஊடகம் பேசுவதை விட அதிகமாக கோழைகள் பேசுகிறார்கள் !

பள்ளிகளுக்கு எப்போதுமே விளம்பரம் பள்ளிகள் கொடுப்பது இல்லை .மக்கள் தான் கொடுக்கிறீர்கள் .ஏனெனில் தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் தான் எல்லோரும் படிக்க வேண்டும் .இதை தாண்டி வேறொரு பள்ளியில் படித்து அடுத்தவரின் குழந்தைகள் ஒரு விஷயத்தில் கூட தனித்துவம் பெற கூடாது என்ற எண்ணம் எல்லா தாய்மார்களிடமும் உண்டு .அதை தான் கொரோன விஷயத்திலும் பெரும்பாலும் பின்பற்றி வருகிறோம் .

எல்லோர் மனதிலும் அங்கு இறந்து விட்டார்களா ,இங்கு இறந்து விட்டார்களா என்று தேட ஆரம்பிக்கும் மனநிலைக்கு வந்து விட்டோம்.

தேடலை மாற்றுவோம் !உலகின் மூத்த குடி இது!மூடர் குடி அல்ல !

ஹிப்போகிரட்டீஸ் இன்று இருந்திருந்தால் கூட நிச்சயம் ஆங்கில மருத்துவ நிலை எண்ணி வருந்தி இருப்பார்.!

எட்வர்ட் ஜென்னர் இன்று இருந்திருந்தால்,இந்நிலைக்கு விடிவு கூறி இருப்பார் !

உங்க ஊரில் விளைச்சல் என்ன?

உங்க ஊரில் மழை எப்படி ?

உங்க பையனுக்கு கல்யாணம் எப்போ?

என்று கேள்விகளை மாற்றுவோம் !

இடியாப்ப சிக்கலுக்கு விடியல் தேடுவோம்!


கொரோனவும் கோழையும் !

 நுரையீரல் பாதிப்பு பற்றிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இது !

கொரோன என்பதை ஒழிக்க முடியாதா ? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் உள்ளது .இதனால் உடலால், மனதால் ,பொருளாதாரத்தால் எல்லோரும் எதோ ஒரு வகையில் பாதிப்படைந்து வருகிறோம் . எனவே நிச்சயம் தீர்வு தேட வேண்டும்.

பகுத்தாய்வு என்ற ஒன்று உண்டு .

ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் எல்லோரும் வெற்றியாளனாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார். அப்படி உண்மையிலேயே விரும்பும் ஆசிரியர் என்ன செய்வார் ? நன்றாக படிக்க கூடிய மாணவர்களையும் , கொஞ்சம் தொய்வு உள்ள மாணவர்களையும் தனித்தனியாக அடையாளம் காண்பார் .பிறகு தொய்வு உள்ள மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்துவார் . அப்படி செய்யும் போது , இயல்பாகவே அந்த வகுப்பில் எல்லோரும் நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவார்கள் .

கொரோனாவும் அப்படிதான் !

கொரோன என்பதை எங்க ஊரு வழக்கு மொழியில் சொல்ல வேண்டும் என்றால் கோழை என்று அர்த்தம் . 

கோழைகளை போர் காலத்திற்கு அழைத்து செல்லும் வழக்கம் நம் நாட்டில் எந்த மன்னனிடமும் இல்லை . கோழை என்றவுடன் அச்சம் என்ற பொருள் இல்லை . அவனுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது என்று பொருள் .

கொரோனவும் கோழை உள்ளவர்களாக மாற்றுகிறது . இதில் யாருக்கு முதல் பாதிப்பு வரும் . கோழைத்தனம் உள்ளவர்களுக்கு !எனில் ஏற்கெனவே கோழை உள்ளவர்களை அடையாளம் காண்பது அத்தனை கடினம் இல்லையே !

இன்றுவரை கொரோன விழிப்புணர்வு என்ற பெயரில் ஊடகம் மரண செய்தி கூறும்போதெல்லாம் இதில் ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் என்று எந்த தனி விளக்கமும் தரவே இல்லையே !

எனில் அதில் ஏற்கெனவே நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் தானே அதிகம் இறந்து இருப்பார்கள் . அதை ஏன் எந்த செய்தியும் கூறுவதே இல்லை .

கோழை மரணத்தை காட்டி அச்சத்தை கூட்டுவது சரியல்லவே !

ஆஸ்துமா , பிறவியிலேயே நுரையீரல் பாதிப்பு , நுரையீரல் புற்றுநோய் என்று ஏகப்பட்ட நுரையீரல் நோயாளிகள் இங்கு உள்ளனர் . 2016 முதல் 2018 வரை மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 2 கோடியே 80 லட்சம் முதல் 5 கோடியே 33 லட்சம் மக்கள் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று இந்திய கணக்கெடுப்பு கூறுகிறது . எனில் கொரோனவால் பாதிக்கப்பட்ட மக்கள் இவர்களாகவும் இருக்கலாம் இல்லையா ?

ஆண்டுக்கு 80 கோடி கிலோ புகையிலை உற்பத்தி இந்தியாவில் நடக்கிறது . உலகில் சீனாவிற்கு அடுத்து புகையிலை உற்பத்தி அதிகம் செய்வது இந்தியாவில் தான் ! அதன் அதிகப்படியான நுகர்வோரும் இந்தியர்கள் தான் !

இதில் ஆண்டுக்கு 3.3 % அளவிற்கு நுரையீரல் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது .

மேலும் நுரையீரல் நோய்கள் அதிகரிக்க நம் உணவும் , அமரும் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் , கழிவறையில் அமரும் முறை உட்பட , உறங்கும் படுக்கை மாற்றங்கள் எல்லாம் காரணம் .!

வைட்டமின் A மற்றும் வைட்டமின் டி உள்ள உணவு பொருள்களை அதிகம் எடுத்துக்கொண்டாலே போதும் .நுரையீரல் பாதிப்பில் இருந்து விடுபடலாம் .சூரியஒளியின் ஆற்றல் நுரையீரல் பலப்படுத்தும் .முருங்கை , கருவேப்பிலை ,மீன் ,இறைச்சி , உள்ளூர் கொடி காய்கறிகள் எல்லாம் நமக்கான நன்மைகளை செய்ய காத்து இருக்கின்றன .

தேடலும் விடையும் , அதற்கான முடிவுகளும் நம்முடைவை என்பதை நினைவிற் கொள்வோம் !

கொரோன எனும் மணிமுடி சண்டையில் இருந்து ஒதுங்கி வாழ்வோம் !



வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...