மருந்தே இல்லை என்றால் அதன் பெயர் மருத்துவமே அல்ல !ஆனால் அதே இடத்திற்கு எல்லோரும் வர வேண்டும் என்றால் அங்கு Trial and Error முறையில் பரிசோதனைக்குள் வர எல்லோரும் எலிக்குட்டிகளும் அல்ல !
மனசாட்சி உள்ள ஆங்கில மருத்துவர்களும் இங்கு வாழத்தான் செய்கிறார்கள் .ஆனால்,ஊடகம் பேசுவதை விட அதிகமாக கோழைகள் பேசுகிறார்கள் !
பள்ளிகளுக்கு எப்போதுமே விளம்பரம் பள்ளிகள் கொடுப்பது இல்லை .மக்கள் தான் கொடுக்கிறீர்கள் .ஏனெனில் தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் தான் எல்லோரும் படிக்க வேண்டும் .இதை தாண்டி வேறொரு பள்ளியில் படித்து அடுத்தவரின் குழந்தைகள் ஒரு விஷயத்தில் கூட தனித்துவம் பெற கூடாது என்ற எண்ணம் எல்லா தாய்மார்களிடமும் உண்டு .அதை தான் கொரோன விஷயத்திலும் பெரும்பாலும் பின்பற்றி வருகிறோம் .
எல்லோர் மனதிலும் அங்கு இறந்து விட்டார்களா ,இங்கு இறந்து விட்டார்களா என்று தேட ஆரம்பிக்கும் மனநிலைக்கு வந்து விட்டோம்.
தேடலை மாற்றுவோம் !உலகின் மூத்த குடி இது!மூடர் குடி அல்ல !
ஹிப்போகிரட்டீஸ் இன்று இருந்திருந்தால் கூட நிச்சயம் ஆங்கில மருத்துவ நிலை எண்ணி வருந்தி இருப்பார்.!
எட்வர்ட் ஜென்னர் இன்று இருந்திருந்தால்,இந்நிலைக்கு விடிவு கூறி இருப்பார் !
உங்க ஊரில் விளைச்சல் என்ன?
உங்க ஊரில் மழை எப்படி ?
உங்க பையனுக்கு கல்யாணம் எப்போ?
என்று கேள்விகளை மாற்றுவோம் !
இடியாப்ப சிக்கலுக்கு விடியல் தேடுவோம்!
No comments:
Post a Comment