Saturday, 22 May 2021

கொரோனவும் கோழையும் !

 நுரையீரல் பாதிப்பு பற்றிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இது !

கொரோன என்பதை ஒழிக்க முடியாதா ? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் உள்ளது .இதனால் உடலால், மனதால் ,பொருளாதாரத்தால் எல்லோரும் எதோ ஒரு வகையில் பாதிப்படைந்து வருகிறோம் . எனவே நிச்சயம் தீர்வு தேட வேண்டும்.

பகுத்தாய்வு என்ற ஒன்று உண்டு .

ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் எல்லோரும் வெற்றியாளனாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார். அப்படி உண்மையிலேயே விரும்பும் ஆசிரியர் என்ன செய்வார் ? நன்றாக படிக்க கூடிய மாணவர்களையும் , கொஞ்சம் தொய்வு உள்ள மாணவர்களையும் தனித்தனியாக அடையாளம் காண்பார் .பிறகு தொய்வு உள்ள மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்துவார் . அப்படி செய்யும் போது , இயல்பாகவே அந்த வகுப்பில் எல்லோரும் நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவார்கள் .

கொரோனாவும் அப்படிதான் !

கொரோன என்பதை எங்க ஊரு வழக்கு மொழியில் சொல்ல வேண்டும் என்றால் கோழை என்று அர்த்தம் . 

கோழைகளை போர் காலத்திற்கு அழைத்து செல்லும் வழக்கம் நம் நாட்டில் எந்த மன்னனிடமும் இல்லை . கோழை என்றவுடன் அச்சம் என்ற பொருள் இல்லை . அவனுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது என்று பொருள் .

கொரோனவும் கோழை உள்ளவர்களாக மாற்றுகிறது . இதில் யாருக்கு முதல் பாதிப்பு வரும் . கோழைத்தனம் உள்ளவர்களுக்கு !எனில் ஏற்கெனவே கோழை உள்ளவர்களை அடையாளம் காண்பது அத்தனை கடினம் இல்லையே !

இன்றுவரை கொரோன விழிப்புணர்வு என்ற பெயரில் ஊடகம் மரண செய்தி கூறும்போதெல்லாம் இதில் ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் என்று எந்த தனி விளக்கமும் தரவே இல்லையே !

எனில் அதில் ஏற்கெனவே நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் தானே அதிகம் இறந்து இருப்பார்கள் . அதை ஏன் எந்த செய்தியும் கூறுவதே இல்லை .

கோழை மரணத்தை காட்டி அச்சத்தை கூட்டுவது சரியல்லவே !

ஆஸ்துமா , பிறவியிலேயே நுரையீரல் பாதிப்பு , நுரையீரல் புற்றுநோய் என்று ஏகப்பட்ட நுரையீரல் நோயாளிகள் இங்கு உள்ளனர் . 2016 முதல் 2018 வரை மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 2 கோடியே 80 லட்சம் முதல் 5 கோடியே 33 லட்சம் மக்கள் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று இந்திய கணக்கெடுப்பு கூறுகிறது . எனில் கொரோனவால் பாதிக்கப்பட்ட மக்கள் இவர்களாகவும் இருக்கலாம் இல்லையா ?

ஆண்டுக்கு 80 கோடி கிலோ புகையிலை உற்பத்தி இந்தியாவில் நடக்கிறது . உலகில் சீனாவிற்கு அடுத்து புகையிலை உற்பத்தி அதிகம் செய்வது இந்தியாவில் தான் ! அதன் அதிகப்படியான நுகர்வோரும் இந்தியர்கள் தான் !

இதில் ஆண்டுக்கு 3.3 % அளவிற்கு நுரையீரல் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது .

மேலும் நுரையீரல் நோய்கள் அதிகரிக்க நம் உணவும் , அமரும் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் , கழிவறையில் அமரும் முறை உட்பட , உறங்கும் படுக்கை மாற்றங்கள் எல்லாம் காரணம் .!

வைட்டமின் A மற்றும் வைட்டமின் டி உள்ள உணவு பொருள்களை அதிகம் எடுத்துக்கொண்டாலே போதும் .நுரையீரல் பாதிப்பில் இருந்து விடுபடலாம் .சூரியஒளியின் ஆற்றல் நுரையீரல் பலப்படுத்தும் .முருங்கை , கருவேப்பிலை ,மீன் ,இறைச்சி , உள்ளூர் கொடி காய்கறிகள் எல்லாம் நமக்கான நன்மைகளை செய்ய காத்து இருக்கின்றன .

தேடலும் விடையும் , அதற்கான முடிவுகளும் நம்முடைவை என்பதை நினைவிற் கொள்வோம் !

கொரோன எனும் மணிமுடி சண்டையில் இருந்து ஒதுங்கி வாழ்வோம் !



No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...