Sunday, 23 May 2021

கொரோனாவின் கணக்கு வழக்கு

 கொரோனாவின் கணக்கு வழக்கு 


இன்று 24.5.2.21 வரை மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கள் கொரோனவால் உயிர் இழந்துள்ளதாக செய்தி தாள்கள் கூறுகின்றன .

இதன் காரணமாக மேலும் அதீத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .


வணிகவியல் பாடத்தில் ஒரு பகுதி உண்டு . அதாவது , ஒரு நிறுவனத்தின் லாபம் மற்றும் நட்டம் என்பதை மட்டும் தான் கணக்கியல் வழியாக கணக்கிட்டு கூற முடியும். அதில் காரணங்கள் என்ன என்பது இடம் பெறுவதே இல்லை . இதனால் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஊழியர்களிடையே ஏற்படும் சண்டை , சமாதானம் எதுவும் வெளியில் தெரியாது . ஆனால் லாபமும், நட்டமும் அங்குள்ள தொழிலாளர்களின் ஒற்றுமையை அடிப்படியாக கொண்டது . இவை எந்த கணக்கிலும் இது பதிவு செய்யப்படுவது இல்லை . நிறுவனர் அல்லது பங்குதாரர் திறமைசாலியாக இருந்து , இதை ஆய்வு செய்து விட்டால் லாபம் தொடரும், நட்டம் குறையும் . ஒரு வேளை , அவர் கவனிக்க தவறி விட்டால் விரைவில் நிறுவனம் மூடப்படும் .

எனவே வெறும் கணக்கு வழக்கு என்பது ஒரு நிறுவன தொடர் வளர்ச்சியை அல்லது தொடர் நட்டத்தை விளக்காது .

இது கொரோனாவிற்கும் பொருந்தும் !

உலகம் முழுவதுமே , கொரோன இறப்பு என்று தினம் ஒரு பட்டியல் வாசிக்கப்படுகிறது .ஆனால் அங்கு 

உள்ள காற்று மாசு 

நீர் மாசு , மண் மாசு , மக்களின் வாழ்க்கை முறை , உணவு பழக்கவழக்கம் , புகைபிடித்தல் , ஏற்கெனவே நுரையீரல் நோயாளிகள் என்றெல்லாம் பல்வேறு விஷயங்கள் மறைக்கப்படுகிறது .அல்லது கணக்கில் கூறப்படுவது இல்லை .

ஏன் என்பது தெரியவில்லை .

இந்தியாவில் , ஏற்கெனவே நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 5 கொடியே 80 லட்சம் பேர் . இன்று வரை இறந்தவர்கள் வெறும் 3 லட்சம் பேர் தான் !

அதே சமயம் ,

மருத்துவர்கள் ஒரு நோயாளியை அனுமதிக்கும் போதே நோயாளியின் history எழுதிய பிறகு தான் நோயிற்கான மருந்தையே கொடுக்க முடியும் எனும் போது , ஏன் மருத்துவ துறையில் கூட இறந்தவர்களில் இத்தனை பேர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் என்று கூற முடியவில்லை .

மருத்துவ தர்மம் தடுக்கிறதா ?

இதை தனித்தனி எடுத்து கூறி மக்களின் அச்சத்தை போக்க வேண்டிய கடமை பத்திரிகையாளர்களுக்கு இல்லையா ? பத்திரிக்கை தருமம் தடுக்கிறதா ?

இங்கு ஜாதியை பற்றி கூட பேசி கொண்டே இருக்கும் எழுத்தாளர்கள் , மக்களின் அச்சத்தை போக்க எழுதுவது இல்லை . எழுத்து தர்மம் தடுக்கிறது .

இந்தியா தலை சிறந்த மருத்துவர்களையும் , எழுத்தாளர்களையும் கொண்டு உள்ளது .

ஆனால் ,ஏனோ மௌனம் சாதிக்கப்படுகிறது .

இந்த கணக்கு வழக்கு பார்க்காமல் இருப்பது சரிதானா ?




https://scroll.in/latest/991807/coronavirus-180-people-have-died-after-vaccination-in-india-till-march-29

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...