Wednesday, 26 May 2021

மதுவந்தி - ஒரு மாநிலத்தில் ஆளுநராக !

 

ஆரியம் vs திராவிடம் 


நாள்: 27.5.20021 - வியாழக்கிழமை 

இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்கள் முழுக்க ஒரு பள்ளியும் அதன் உரிமையாளரும் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உட்பட்டு எழுதப்படுகிறார்கள் .
அந்த பள்ளியின் ,வணிகவியல் ஆசிரியர் இணைய வழி வகுப்பில் ஒரு மாணவியிடம் தவறாக ,புலன வழியில் குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார் . அதை அடிப்படையாக கொண்டு தான் பிரச்னை!
அந்த ஆசிரியர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து விட்டது.

அந்த பள்ளியின் பெயர் பத்மா சேஷாத்ரி பள்ளி ,சென்னை
அதன் உரிமையாளர்கள் : நடிகர்: ஒய் .ஜி .மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தி . 
              
இந்த சமூகம் விழித்து கொண்டது.எல்லாவற்றிக்கும் போராட ஆரம்பித்து விட்டது .எனவே உடனுக்குடன் நீதி கிடைத்து விடும் என்றெல்லாம் எண்ணி விட்டால் , நம் அறிவிற்கு சில விஷயங்கள் இன்றும் புரிய வில்லை என்றே அர்த்தம் !



நம் அன்றாட வாழ்வில் நாம் செய்து வரும் மிக முக்கிய விஷயம் .
எப்போதும் தொலைக்காட்சிகளில் அல்லது நேரிலோ கூட மானை புலி துரத்தினால் ,மானுக்காகவே பரிந்து பேசுவோம் . புலியை திட்டி தீர்த்துவிடுவோம்.
மான் தப்பித்து விட்டால் , மனம் திருப்தி அடைந்து விடும் . பிறகு நாம் கோழியோ,ஆட்டையோ அடித்து உண்போம் .இது தான் உலக வழக்கும் கூட !

இது என்ன மனநிலை ? நம்மிடம் இரக்க குணம் உண்டு என்றெல்லாம் நாம் அலட்டி கொள்ள கூடாது .
வனவிலங்கு சட்டம் 1972 க்கு முன்பு வரை 
எல்லோரும் மான் கறி உண்டவர்கள் தான் !மானின் எண்ணிக்கை குறைந்து விட்டது ,பிறகு மான் பாவம் என்ற போதனைக்கு ஆட்பட்டது .

இப்போ கதைக்கு வருவோம். இதை உளவியல் எப்படி கூறுகிறது என்றால் , இந்த சட்டம் வரவில்லை என்றாலும் நாம் மானுக்காகதான்  பேசி இருப்போம் . ஏனெனில் நமக்கு எதிரி , உணவு எதிரி தான் புலி  !
அதனால் நாம் புலியை விரட்டுவதில் எந்த தவறும் இல்லை . என்றே கூறுகிறது .


அப்படித்தான் , இந்த பள்ளிக்கூட விஷயத்திலும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது .இங்கு யாரும் அந்த பெண்ணிற்காக பேசவே இல்லை . மாறாக அதன் உரிமையாளரை எப்படியெல்லாம் பேச வேண்டுமோ ,அப்படியெல்லாம் பேசுகிறார்கள் .

பிறகு தான் அடிப்படை புரிந்தது . பள்ளியின் உரிமையாளர்கள் பிராமண சமூகம் . திட்டுபவர்கள் எல்லாம் திராவிடம் !
எனில் இந்த சண்டை நியாயம் தானே !

இங்கு நல்லது செய்து பெயர் வாங்குவது கடினம் .ஆனால் அல்லது செய்து விளம்பரமாவது மிகச் சுலபம்!
திட்டி திட்டியே ஒருவருக்கொருவர் விளம்பரம் கொடுப்பதில் வல்லவர்கள் ஆரியம் மற்றும் திராவிடர்கள் ! 

பொள்ளாச்சி பிரச்னை நடந்தது ,அதில் சம்மந்தப்பட்டவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள் !
நிர்மலா தேவி என்ற பெண் பேராசிரியர் , பெரும் புள்ளிகளுக்காக கல்லூரி மாணவிகளை அனுப்பி வைக்கும் தரகர் வேலை பார்த்தார் . என்ன நீதி கிடைத்து விட்டது . இங்கு யார் தண்டிக்கப்பட்டார்கள் .எதுவும் இல்லை.
காசி என்ற கயவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சனையின் தீர்வு என்ன ?

எதுவும் இல்லை !
மாறாக இவர்களெல்லாம் பிரபலமானார்கள் என்பது மட்டுமே உண்மை !நாளையே காசி தேர்தலில் நின்றால்  கூட வெற்றி பெற்று விடுவான் .

ஏனெனில் மக்களுக்கு நல்லது , அல்லது இரண்டிற்கும் இடையில் நினைவில் இருக்கும் பெயருக்கு மட்டும் தான் வாக்களிப்பார்கள் .

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ,மதுவந்தி என்பவரை யாருக்கும் தெரியாது .
தமிழிசை சௌந்தர்ராஜன் , தெலுங்கானா ஆளுநர் ஆவதற்கு முன்பு வரை மதுவந்தி வெளியில் பெரிதாக பேசப்பட்டதே இல்லை . ஆனால் , தவறாக பேசுவது , அதற்கான விமர்சனங்கள் என்று எதிர்மறை விளம்பரங்கள் மூலம் , மிக விரைவில் விளம்பரமாகி விட்டார் .

எதிர்பார்ப்போம் விரைவில் , மதுவந்தி ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆளுநராக !
அது வரையில் ஆரிய , திராவிட சண்டை என்ற பெயரில் விளம்பரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் !

அப்போ நாம் என்ன செய்வது ?
எப்போதும் போலத்தான் வேடிக்கை பாப்போம் !





No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...