Tuesday, 3 July 2018

அந்நிய நேரடி முதலீடு 2018

2017 - 2018 ம் ஆண்டுதான் இந்திய வரலாற்றிலேயே மிகவும் குறைந்த அளவு , அந்நிய நேரடி முதலீடு நடந்து இருக்கிறது .
அந்நிய நேரடி முதலீடு என்பது இந்தியாவிற்கு நல்லது அல்ல என்ற போதிலும் , 2016 ம் ஆண்டு நாவேம்பரில் பணமதிப்பிழப்பு நடந்த போது கூட அதிக அளவிலான முதலீடு பெற்ற இந்தியா , இன்று முதலீடு குறையும் நிலைக்கு வந்துள்ளது .


2017 ம் ஆண்டு , சீனாவின் 600 நிறுவனங்கள் 85 பில்லியன் டாலர்களை  இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருந்ததாக தகவல் தருகிறது  economic Times .
ஆனால் இன்று இல்லை .

2018  ஆண்டு கணக்கின் படி மொரீசியஸ், நெதர்லாந்து , சிங்கப்பூர் , அமெரிக்கா , ஜப்பான் மட்டுமே அதிக அளவில் முதலீடு செய்துள்ளன . அதிலும் மொரீசியஸ் மட்டுமே அதிகப்படியாக 14 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது . அமெரிக்காவும், ஜப்பானும் முறையே 2 பில்லியன் , 1 . 5 பில்லியன் டாலர் அளவிலேயே முதலீடு செய்துள்ளன .

மாறாக , இந்தியாவில் உள்ள தனி நபர்கள் , உலகம் முழுக்க செய்துள்ள முதிலீடு 11 பில்லியன் அளவில் எட்டியுள்ளது .
இந்த முரண்பாடு ஏன் ?

வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்கள் ஏன் இந்தியாவில் முதலீடு செய்வது இல்லை ?
பதில் இல்லை .

அதே சமயம் , குறைந்த அளவு வெளி நாடு முதலீடு என்பது , இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு போதுமான சலுகை இல்லாததாலேயே ஏற்படுகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்களாம் .
இதையே காரணமாக கொண்டு , வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மேலும் பல சலுகைகள் வழங்க இந்தியாவும் முயற்சிக்கிறது ,

இதில் ஒரே ஒரு சந்தேகம் தான் ,
அப்போ , கடந்த 4  ஆண்டுகளாக , பிரதமர் மோடி பல நாடுகள் சென்று போட்ட ஒப்பந்தங்கள் என்ன ஆனது ?


No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...