Tuesday, 10 July 2018

தமிழர்களும் , ஆடைகளும் !



ஆடை இன்றி இருந்தார்களா ?

ஆடைகள் இருந்தன,
4000 ஆண்டுகளுக்கு முன்பே பருத்தியை பயன்படுத்தி ஆடைகளை செய்திருக்கிறார்கள், ஆரிய இனம் ஆடையின்றி அலைந்த காலத்திலே,

பருத்தியில் வண்ண வேலைபாடுகள் செய்து அணிந்து இருக்கிறார்கள்
ஆனால், வேட்டி, சேலை, 7 கஜம், 8 கஜம், பிளவுஸ்
விதவித ஆடை எதுவும் கிடையாது.
தேவைக்கு ஏற்பவே,
ஒன்று, இரண்டு ஆடைகள் நெய்து உடுத்தி இருக்கிறார்கள்.
வள்ளுவர் பற்றி குறிப்பிடும் போதே, அவர் நெசவு தொழில் செய்தவர் என்பர்,
அதே போல, பாரியின் மகள்கள் இருவரும், ஒரே ஆடையை மாற்றி மாற்றி உடுத்தி கொண்டார்களாம்.
இதையும் தாண்டி,
வண்ணார் என்ற ஜாதியும்
புலையன் என்ற பெயரும்
ஆடைகள் உடுத்தி இருந்ததையே குறிக்கும்.



தஞ்சாவூர் அரண்மனை கேலரியில், சோழர் கால சிலை உடை, நாயக்கர் கால சிலை உடை
வேறுபாடு காட்டும்


ராஜா ராஜ சோழனும் அவனது மனைவியும் !


சோழர்கள் காலம் வரையிலும் , கூட மெல்லிய ஆடைகளே பயன்படுத்த பட்டுள்ளன .
அதன் பிறகு நாயக்கர் காலத்தில் தான் 
கஜ கஜமாக நூல் நூற்க பட்டு , அவை ஆடைகளாக மாறின .

மேலும் மராத்தியர்கள் காலத்தில் , இந்த ஆடை வடிவைப்பு முறை மாறியுள்ளது .



அதை தொடர்ந்து ஆங்கிலேயர்கள் காலத்திலும் , 
இந்தியாவில் 19 ம் நூற்றாண்டு தொடக்கத்தில் , நுஸ்ரத் வாடியா என்பவரால் , தையல் இயந்திரம் அறிமுகம் செய்ய பட்டுள்ளது .

அதன்பிறகு தான் , விதவிதமாக ஆடைகள் வந்தன . அதன் அடிப்படையாக பஞ்சாலைகள் பெருகின . 

இதற்க்கு இடையில் இஸ்லாமிய வருகையும் , 
ஆடை வடிவமைப்பில் முக்கிய இடம் பிடிக்கிறது .

ஆரிய , திராவிட , பார்சி , இஸ்லாமிய இனம் எல்லாமே இரானிய தொடர்புடையவை .
இந்த உலகில் ஆடை வடிவமைப்பு மற்றும் கலை துறையில் பெரிதும் சாதித்தவர்கள் 
இரானியர்களே !

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...