Monday, 23 July 2018

மக்களின் முடிவு தவறா? வழங்கபட்ட பதில்கள் தவறா?

மக்களின் முடிவு தவறா? வழங்கபட்ட பதில்கள் தவறா?
1970 - 1993-ம் ஆண்டு வரை ஏறத்தாழ 48 விவசாயிகள் தமிழகப் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
________ ___________________
1952 ல் ராஜாஜியால், மொழி பிரிவினை மாநிலம் கேட்டு, போராடிய மக்களுக்கு வழங்கப்பட்டது துப்பாக்கி சூடு
டால்மியாபுரத்தை கல்லகுடி பெயர் மாற்றும் போராட்டத்தில் துப்பாக்கி சூடு வழங்கி
அத்தோடு ராஜா ஜியின்
ஸ்வதந்திரா கட்சியை
தூக்கி எறிந்தனர் மக்கள்
1954-1963 காங்கிரஸ், காமராசர் தொடர்ந்து 1965 ல்பக்தவச்சலம்
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில்
துப்பாக்கி சூடு வழங்கி உள்ளார்
அத்தோடு
காங்கிரஸ் கட்சியை
தூக்கி எறிந்தனர் மக்கள்.
இப்போ, DMK அண்ணாதுரை இயற்கை மரணம் எய்தபிறகு,
தொடர்ந்து கலைஞர் கருணாநிதி
1970ல் நாராயணசாமி நாயுடு,
தொழில் துறைக்கு வழங்கும் மின்சாரம் அளவிற்கு, விவசாயத்திற்கும் வேண்டும் என்று போராடியபோது
துப்பாக்கி சூடு, ஆணை வழங்கி உள்ளார். 3 விவசாயிகள் உயிர் இழந்தனர்.
இப்போ கருணாநிதி தூக்கி எறியபட்டார்.
ADMK வந்தது,
1977 முதல் 1987 வரை எம்ஜிஆர் ஆட்சியில் மெரினா கடற்கரையை அழகுபடுத்த எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு,
அருப்புக்கோட்டை அருகே வாகைக்குளத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு,
திருச்சி சிம்கோ மீட்டர் ஆலைத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு, சென்னை வியாசர்பாடியில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு என பல சம்பவங்கள் நடந்தன. அதில் பலர் உயிரிழந்தனர்.
பல துப்பாக்கி சூடுகளை நிகழ்ச்சி,
நக்சலைட்டுகளை அழித்தேன் என்று பெருமை கொண்டவர் எம்.ஜி.ஆர்.
நம்மாழ்வார் குறிப்பிட்ட துப்பாக்கி சூட்டை நிகழ்த்திய வரும் MGR தான்.
1987ல் வன்னிய சமூகத்தின் மீது, துப்பாக்கி சூடு, அச்சமயம் MGR அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தாராம்.
உத்தரவு தானாகவே அரங்கேறியுள்ளது.
இப்போ ஜெயலலிதா
அவரும் துப்பாக்கி சூட்டில் சளைத்தவர் இல்லை.
மீண்டும் கருணாநிதி
மீண்டும் 1999 மாஞ் சோலை துப்பாக்கி சூடு
மீண்டும் ஜெயலலிதா வெற்றி
மீண்டும்
2011ல் பரமகுடியில் துப்பாக்கி சூடு
இது
60 நாட்களுக்கு முன்பு நடந்த ஸ்டெர்லைட் வரை தொடர்ந்து விட்டது.
மக்களும்
மாற்றி மாற்றி முடிவெடுத்து ஒரு பயனும் இல்லை.
காரணம்
நாம் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற 4 வாய்ப்பையும் யாரோ ஒருவர்
தீர்மானிக்கிறார்.


No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...