தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளும் , கழிவுகளும் - 1
தமிழ்நாடு முழுக்க உள்ள 350000 விசை தறி மூலமும் , சாய தொழிற்சாலைகள் மூலமும்
கோவை , திருப்பூர் , ஈரோடு , சேலம் பக்கம் கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுகின்றன .
1975 ல தொடங்கப்பட்டு , 1995 ல் மூடப்பட்ட குரோமியம் ஆலை கழிவு மட்டும் கடந்த ஜூன் மாதம் வரை 2 .25 லட்சம் டன்னாக உள்ளது . இதனால் புற்று நோய் பரவுகிறது என்பதையும் , நிலத்தடி நீர் மாசுபடுவதையும் மாசு கட்டுப்பட்டு வாரியம் கூறியுள்ளது .
இந்த குரோமியம் ஆலை எதற்காக தொடங்கப்பட்டது .எனில் 1226 தோல் பதனிடும் ஆலைகள் இயங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது . இந்த தோல் தொழிற்சாலைகளால் , நோய்கள் பரவுகின்றன என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது . அதை தடுக்க 2 கோடியே 65 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன என்றும் 2015 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலைகள் மூலம் 5000 கோடி க்கு தொழில் பரிவர்த்தனை நடக்கிறது . அதில் 2000 கோடி , ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணி ஈட்டுகிறது . ஆனால் , பாதிப்பு இங்கு வாழும் மக்களுக்கு !
பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் :
தமிழ்நாட்டில் இருந்து 18000 கோடிக்கு பிளாஸ்டிக் உற்பத்தி நடக்கிறது . தென்னிந்தியாவிலேயே அதிக அளவில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் மக்களும் தமிழ் நாட்டு மக்கள் தான் . அதிக உற்பத்தியம் தமிழ்நாடுதான் .
அதன் பாதிப்பை அனுபவிப்பதும் தமிழ்நாடுதான் .
ஆண்டுக்கு 9 லட்சம் டன் பிளாஸ்டிக் உற்பத்தியில் ஈடுபடும் 155 பிளாஸ்டிக் நிறுவனங்களை தமிழ்நாடு பெற்றுள்ளது .
இதன் கழிவுகள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை .
மதுரை , கோவை , சென்னை , என்று பாரபட்சம் இல்லாமல் தன கழிவுகளை இறைத்து கொண்டு முன்னேறி வருகிறது பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் .
ரப்பர் தொழிற்சாலைகள் :
மதுரையும் , கோவையும் போட்டி போட்டு கொண்டு நூற்றுக்கணக்கான ரப்பர் தொழிற்சாலைகளை கொண்டுள்ளன .
---- தொடர்வோம் .
No comments:
Post a Comment