ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் என்பதை கொண்டாடும் இந்த உலகம் தான் , மூன்றாவது குழந்தை பெற்ற பெண்ணையும் ,ஆணையும் தரக்குறைவாக பேசுகிறது .
முதலில் பிரசவத்திற்கு வரும் பெண்களை தரக்குறைவாக பேசுவதை நிறுத்துங்கள் என்று கூறலாம் , ஆனால் நாம் தான் வீட்டு பிரசவத்தை விட்டுவிட்டு அடுத்தவர் மருத்துவத்தை தேடி போனோம் !
அனுபவிக்கிறோம் !
( செவிலியர்கள் யாரும் திட்டுவதே இல்லை என்று கூறினால் பெண்கள் பிரசவ நேரத்தில் நீங்கள் , மருத்துவமனை பக்கம் போனதே இல்லை என்று பொருள் ! )
https://www.dinamalar.com/news_detail.asp?id=2781466
எத்தனை குழந்தை பெற்றாலும் தாய்மை தானே !
அதென்ன முதல் குழந்தை என்றால் தாய்மை !
அதுவே மூன்றாவது குழந்தை என்றால் அசிங்கம் !
பிறகு அந்த காலத்தில் எங்க பாட்டி எல்லாம் 12 பிள்ளை பெத்துச்சி என்று அங்கலாய்ப்பு வேறு !
அந்த காலத்து பாட்டி 12 குழந்தை கூட பெற்று கொள்ளலாம் .அவளுக்கு சுதந்திரம் இருந்தது .இந்த காலத்தில் தான் 3 வது குழந்தை பெற கூட பெண்ணுக்கு உரிமை மறுக்கப் படுகிறது . அதற்கு பெண்ணே , வருந்தும் அளவிற்கு வெட்கப்பட வைக்கும் கேள்விகள் வேறு !
No comments:
Post a Comment