Monday, 14 June 2021

ஊருக்கு உபதேசம்

 நாம் இருவர் நமக்கு இருவர் , நமக்கு ஒருவர் , நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தை என்றெல்லாம் கனரக வாகனங்களில் பல இடங்களில் பார்த்திருப்போம். உண்மையிலேயே 2016 ல் தான் அரசு , இரண்டு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ள வேண்டும் என்றால் அனுமதி கடிதம் பெற வேண்டும் என்பதை பற்றி பேசியே உள்ளது .இன்னும் அதுவும் நடைமுறையில் இல்லை .இன்றும் பீகார் , ராஜஸ்தான் ,மேற்கு வங்கத்தில் 5 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்கிறார்கள் .

எனில் தமிழ்நாட்டில் யார் இதை பரப்பியது என்றால் ,'

பள்ளிகள் ,

3 வது குழந்தைக்கு மருத்துவமனைக்கு வரும் பெண்களை திட்டி தீர்க்கும் செவிலியர்கள் ,

வாடகைக்கு வீடு கொடுத்தோர் ,

நிறுவனங்கள் - 3 வது குழந்தையுடன் வெளிநாட்டில் வேலை என்றால் , மூன்றாவது குழந்தைக்கு விசா எடுப்படுப்பது உட்பட எதிலும் நிறுவனம் தலையிடாது .

நண்பர்கள் , 

நீயெல்லாம் படித்தவனா என்ற கேள்வி .

( தமிழில் சுத்தமாக பிடிக்காத ஒரே வார்த்தை இது தான் , நீயெல்லாம் படித்தவனா என்பது . சரியாக கேள்வி கேட்கணும் .ஆங்கில கல்வி வழிமுறையை சரியாக படித்தவனா என்று தான் கேட்கணும் . மக்கள் இனிமேல் இப்படி கேட்கட்டும் .அப்போ பதில் கிடைக்கலாம் .)

முக்கிய பங்கு சினிமாவிற்கு உண்டு .

திரைப்படங்கள் தான் மக்களுக்கு எல்லா அறிவையும் கொண்டு சேர்த்து ஆயுதம் !

இந்த குழந்தை பிறப்பை தடுத்து நிறுத்திய பின் , திருமணம் பற்றிய கேள்விகள் .

அரசே இன்னும் 30 ஆண்டுகள் கழித்து தான் 35 வயது என்று மாற்றும் என்று வைத்து கொள்ளலாம் .ஆனால் தமிழ்நாட்டில் கொடுக்கப்படும் அலப்பறைகள் இருக்கே !

அதனினும் மோசமாக போய் கொண்டு இருக்கிறது .

இப்போதைய நிலை .! ஊசி போட்டுட்டியா ?என்பது !

கடைசியில் கேட்பவர்களை நாமும் திருப்பி கேட்டால் , பதில் சொல்லாமல் திருப்பி கொண்டு செல்கிறான் . 


ஊருக்கு உபதேசம் 

No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...