கல்வியின் அடுத்த நிலை என்ன என்றால் எல்லோரும் கூறும் ஒரே பதில் வேலைவாய்ப்பு.
வேலை வாய்ப்பிற்காகத்தான் கல்வியா ? அறிவு வளர்ச்சிக்கு இல்லையா ? அறிவு வளர்ச்சிக்கு தான் கல்வி என்றால் ,கல்வியை முடித்தவுடன் ஒரு மாணவனின் அடுத்த முடிவு வேலை தேடி அலைவது அல்ல.முதலில் கல்விக்கான நோக்கத்தை மாற்ற வேண்டும் .காலம் காலமாக வேலை தேடி அலைவது ,அதை அரசு ஏற்படுத்தவில்லை என்று இந்த அரசை அந்த அரசு குறை சொல்வது ,அந்த அரசை இந்த அரசு குறை சொல்வது என்பதெல்லாம் ,ஆய்வாளர்களின் வேலையே அல்ல .அது அறிவார்ந்த சமூகத்தின் வேலை அல்ல.
எந்த பாடத்திட்டங்களும் , ஒரு மாணவன் ஒரு பொருளை உருவாக்குவது பற்றியோ ,அதை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது பற்றியோ கூறுவதே இல்லை .நியூட்டன் ,ஐன்ஸ்டின் என்று பாடம் நடத்த மட்டுமே உதவுகிறது .கிட்டத்தட்ட இது வாட்ஸாப் forward msg போலத்தான் இங்குள்ள பாடத்திட்டங்கள் உள்ளன .
ஒரு வணிகவியல் ,பொருளாதார பாடத்திட்டத்திலும் ,ஒரு தொழில் தொடங்கினால் என்னென்ன இடர்கள் வரும் ,அதற்கு வங்கியில் கடன் வாங்கலாம்,காப்பீடு செய்யலாம் என்று வங்கிக்கும் ,காப்பீடு நிறுவனங்களுக்கும் விளம்பரங்கள் இருக்கிறதே தவிர ,ஒரு வணிகத்தை எப்படி ஆரம்பிப்பது என்று எந்த பாடமும் இல்லை .வேளாண் பொருளுக்கான நடைமுறைகள் பற்றியெல்லாம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை .
அறிவியல் பாடங்களில் மேற்கத்திய விஞஞானிகளின் அறிவு புகழ் பாடப்படுவது போல , வணிகவியல் ,பொருளாதார் பாடங்களில் மேற்கத்திய கணக்கு வழக்குகளை உலகம் முழுவதும் ஒரே மாதிரி கையாளுவது என்ற முறை தான் உள்ளதே தவிர , ஒரு தொழில் நிறுவனம் ஆரம்பிக்க வேண்டிய நடைமுறை பாடங்கள் அங்கு இல்லை .
பிறகு எப்படி கல்வி பயன் தரும் ?
No comments:
Post a Comment