Sunday 20 June 2021

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - Dettol Heros

 மிகச் சிறந்த சந்தையிடுதல் முறையை பின்பற்றும் RB என்று வழங்கப்படும்  Reckitt benckiser என்ற UK நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தை தான் இந்தியா . அதிலும் 2019 க்கு பிறகு கொழுத்த லாபம் பெற்றுள்ளது . காரணம் அந்த பெருந்தொற்று ! 

நமக்கு தெரிந்த மொழியில் சொல்ல வேண்டும் என்றால் டெட்டோல் கம்பெனி , ஹார்பிக் கம்பெனி , லைச்சொல் கம்பெனி என்று தான் நாம் சொல்ல வேண்டும் . இவை எல்லாமே இந்த பெருந்தொற்று காலத்தில் அதிக அளவில் பயன்படுத்த பரிந்துரைக்க பட்ட பொருள்கள் !


கடந்த சில ஆண்டைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு லாபம் பெற்றுள்ள இந்நிறுவனத்தின் 2019 ல்  CEO வாக பெப்சிகோ நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய வம்சாவழி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற லக்ஷ்மண நாராயணன் நியமிக்கப்பட்டார் .

அவரின் அடுத்த சந்தையிடுதல் முறைமையின் முக்கிய பங்கு தான் , ஹீரோ க்களை டெட்டோல் லெபெலில் ஓட்டுவது .

இவ்வாறாக கிட்டத்தட்ட 5 லட்சம் ஹீரோக்கள் 2020 - 2021 ல் உருவாகி இருக்கிறார்கள் .அதனை பெருந்தொற்று காலத்தில் , உழைத்தவர்கள் என்றே கூற வேண்டும் .  எனவே அவர்களை கவுரவ படுத்தும் விதமாக அவர்களுக்கு மரியாதை செய்வதாக கூறி கொண்டு , தனக்கான வாடிக்கையாளர்களை நிரந்தர படுத்துகிறது இந்நிறுவனம் .


வளர்ந்தது நோய் மட்டுமல்ல ! இது போன்ற பல நிறுவனங்களும் தான் ! 

இதன் மூலம் இந்நிறுவனங்கள் பெறும் லாபத்தால் நம் நாட்டிற்கு என்ன பயன் ? லாபம் முழுக்க இங்கிலாந்திற்கு செல்கிறது . அதன் பங்குதாரர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் .


நோய் வந்தால் , பிற நாட்டார் தான் இங்கு செல்வம் சேர்க்கிறார்கள் .

எனவே 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் !

உள்ளூர் பொருள்கள் உள்ளூர் செல்வதை பெருக்கும்!

உள்நாட்டு உற்பத்தி , வேலைவாய்ப்பும் , விளைபொருளும் குறைந்த விலையில் அள்ளி கொடுக்கும் !


பிற நாட்டு பொருள்கள் தவிர்ப்போம் !

நோயில்லா வாழ்வு பெறுவோம் !


=================================================

https://en.wikipedia.org/wiki/Johann_Benckiser


Reckitt Benckiser Place & Distribution Strategy:

Following is the distribution strategy of Reckitt Benckiser:

The company founder Johann Benckiser established the company in Pforzheim, Germany in 1823. The first overseas business was opened in Australia in 1886. Reckitt Benckiser is a global organization operational in nearly 60 countries and sales in 200 countries spread over 6 continents. Over 40000 employees are working for RB in these locations. In India, corporate operations of RB are located in Gurgaon, Haryana. The company has always focused on its core brands with emphasis on supply chain and distribution. For continuous innovation Reckitt Benckiser has R&D facilities located in 35 countries. Major facilities and based in India, Germany, Italy, China, Thailand and USA. This global network of experts works together for formulation of new products. They have planned to start newest Center for Scientific Excellence in Hull, United Kingdom in 2018. It is largest single investment for company with £105 millions


https://www.mbaskool.com/marketing-mix/products/17531-reckitt-benckiser.html





https://www.ndtv.com/business/reckitt-benckiser-names-pepsico-executive-laxman-narasimhan-as-next-chief-executive-officer-2051980



https://www.bseindia.com/markets/keystatics/Keystat_turnoverequity.aspx


No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...