பில் கேட்ஸ் நமக்காக ஒரு பாடம் நடத்துகிறார் .அது என்னவெனில் ,
நிலங்களை உரிமை கொள்ள வேண்டும் !
மருத்துவமனைகளை அல்ல ,மருத்துவத்தை அதற்கு அடித்தளமாக உள்ள மருந்து உற்பத்தியையே கைக்கொள்ள வேண்டும் .
தகவல் தொழில் நுட்பத்தை வசப்படுத்தி கொள்ளவேண்டும் .
இவை மூன்றும் நவீன உலகின் நம்மை யாருக்கும் அஞ்சாமல் வாழச்செய்யும் முப்பெரும் கருவிகள் .
ஆனால் ,நாமோ விவசாய நிலங்களை விற்று , அதை கேவலமான தொழில் என்று பார்க்க ஆரம்பித்து விட்டோம்.
தமிழ் மருத்துவத்தில் நாமே மருந்து தயாரிக்கும் முறைகளை படிப்பறிவு , மேற்கத்திய அறிவுக்கு ஒத்து போகவில்லை என்று தவிர்த்து வருகிறோம்.
இன்று நாம் பயன்படுத்தும் தகவல் தொழில் நுட்பம் முழுவதும் பிற நாடுகளின் சார்பு தன்மையில் இருக்கிறது .
No comments:
Post a Comment