தொழிற்சாலை உற்பத்தி எனும் இரண்டாம் நிலை உற்பத்தி மூலம் நாட்டின் இயற்கை வளங்கள் அழிகின்றன . இதை தடுக்க முடியாத சூழலில் இருக்கிறோம் .ஏனெனில் தொழில் வளம் என்பது மிக அவசியம் என்ற நிலைக்கு வந்து விட்டோம் .
சீனாவிலும் இயற்கை வளங்கள் அழிந்து கொண்டு இருக்கிறது .
ஆனால் அதனால் மறுபுறம் இன்னும் எத்தனை கொரோன வந்தாலும் அந்த நாடு தாங்கும் .ஏனெனில் உற்பத்தியும் ,முதலீடும்,உழைப்பும் என்று எல்லாம் அவர்களுக்கே சொந்தம் .
ஆனால் இந்தியாவில் உற்பத்தி நடக்கிறது .இயற்கை வளங்கள் அழிகிறது.உழைப்பு உறிஞ்சப்படுகிறது.கழிவுகள் பெறுகிறது.
ஆனால் ஒரு கொரோனாவிற்கே மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லை. ஏனெனில் எல்லா முதலீடும் அயல்நாட்டவருடையது .அவன் இங்கு முதல் மட்டும் தான் போடுகிறான்.உற்பத்தி செய்கிறான். மூலப்பொருள்களை மிக குறைந்த விலையில் அல்லது இலவசமாக பெறுகிறான்.உழைப்பையும் மிக குறைந்த விலையில் ( தொழிலாளர் சம்பளம் ) பெறுகிறான். மின்சாரம்,இடம்,நீர் என்று எல்லாம் நாடு இலவசமாக தருகிறது.உற்பத்தி பொருளை இங்கேயே அதிக விலைக்கு விற்கிறான் .போட்ட முதலை விட இரண்டு மடங்கு மும்மடங்கு பணத்தோடு நாடு திரும்புகிறான்.
அதனால் இங்கு பணப்புழக்கமும் ,பண மதிப்பும் குறைந்து கொண்டே போகிறது .இதன் விலை கிடுகிடு என்று உயர்கிறது .பண வீக்கம் ஏற்படுகிறது .ஆனால் அரசோ இந்த காரணங்களை மறைத்துவிட்டு பணவீக்கத்திற்கு கருப்பு பணம் தான் காரணம் என்று கதை கட்டும் .
இதன் விளைவு இங்கு ஒரு கொரோனாவிற்கே மக்கள் சிரமப் படுகிறார்கள் .
எனில் இங்கு வெளிநாட்டவரின் தொழிற்சாலை உற்பத்தி எனும் இரண்டாம் நிலை உற்பத்திகளை விட மூல பொருள் எனும் விவசாய உற்பத்தி பெறுக வேண்டும் .நம் மக்களோ விவசாயத்தை தொலைத்து கொண்டு வருகிறார்கள் .
இங்கு வேளாண்மையும் போய்விட்டது.
இயற்கை வளங்களும் போய்விட்டது.
வேளாண்சார்ந்த அடிப்படை அறிவும் போய்விட்டது .
தமிழ்நாட்டில் கூட கடந்த காலங்களை விட வேளாண்மை செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது .வெறும்
21% மக்கள் தான் இப்போது மூலப்பொருள் எனும் விவசாய உற்பத்தியில் இருக்கிறார்கள் .
சுய பொருளாதாரம் என்றால் ,ஆயிரம் கொரோன வந்தாலும் தாங்க வேண்டும் .
சுய பொருளாதாரம் - கொரோன - கருப்பு பணம் .
No comments:
Post a Comment