Saturday, 12 June 2021

எல்லாமே Just forward msg

 எங்கள் வீட்டிற்கு அருகில் ,ராஜஸ்தானி ,குஜராத்தி குடும்பங்கள் உண்டு .

இவர்கள் பெரும்பாலும் ,தங்கள் குழந்தைகளுக்கு பெரிய அளவில் கல்விக்கென்று செலவு செய்ய மாட்டார்கள் .அரசு பள்ளியில் சேர்ப்பார்கள் .

பிறகு வெகு நேரம் ,அந்த குழந்தைகள் , அவர்கள் தகப்பனார் செய்யும் தொழிலை கற்று கொள்கிறார்கள் .

தேர்வு மட்டும் எழுதுகிறார்கள் .குறைந்த மதிப்பெண் பற்றி அவர்கள் கவலை கொண்டதே இல்லை .10 ம் வகுப்பு முடிந்தவுடன் , நேரடியாக தந்தையின் தொழிலில் ஈடுபடுகிறார்கள் . மேற்படி படிக்க விரும்பினால், தொலை தூர கல்வியில் இணைந்து கொள்கிறார்கள் . பிறகு  எல்லா நேரமும் தொழில் ,அது சார்ந்த அனுபவ அறிவை பெறுகிறார்கள் .மூலப்பொருள்கள் வாங்குவது , வாடிக்கையாளரிடம் பேசுவது ,எந்த மாதிரியான வாடிக்கையாளர்கள் வருகிறார்களோ அவர்கள் மொழியை கற்று கொள்கிறார்கள் .

25 வயதிற்கு முன்னதாக திருமணம் .

வாழ்க்கை அடுத்த கட்ட நகர்வு நிகழ்கிறது .

ஆனால் ,நம்ம ஊர்களில் படித்தான் , படிக்கிறான், படிக்கிறான் , படிக்கிறான் எப்போது முடிப்பான் ,எப்போது வாழ்வாதாரம் தேடுவான் , எப்போது திருமணம் செய்வான் என்றால் , வயது 35 ஐ தொட்டு விடுகிறது .

நம் நாட்டின் கல்வியானது , பெரும்பாலும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக forward Msg களாகவே உள்ளன .ஆங்கிலேயர்கள் காலத்தில் கொடுத்த கருத்துக்கள் அத்தனையும் இன்னும் ஆண்டுதோறும் கடத்தப்படுகிறது. 

6 ம் வகுப்பில் 2 பக்கங்களில் உள்ள விஷயம் , கல்லூரி முடியும் வரை இரண்டு இரண்டு பக்கங்களாக அதிகரிக்கிறதே தவிர , அதில் விஷயங்கள் மாறுவதே இல்லை .

தமிழ் பாடங்கள் கால்டுவெல் கொடுத்ததை Forward செய்கிறது .

வரலாற்று பாடங்கள் நீலகண்ட சாஸ்திரி கொடுத்ததை Forward செய்கிறது .

பொருளியல் பாடங்கள் ஆடம் ஸ்மித்திற்கு விளம்பரம் தருகிறது .

கணக்கியல் பாடங்கள் , லூகா பாசியோலின் பாடங்களை Forward செய்கிறது .

அறிவியல் , நியூட்டன் , ஐன்ஸடீன் , லவாய்சியர் போன்றோரை Forward செய்கிறது .

மருத்துவம் , மேற்கத்தியம் சொன்னதை Forward செய்கிறது .

நாம் என்ன படித்தாலும் , எவ்வளவு படித்தாலும் ஒரு சிறு கடையை கூட , படித்தவுடன் தொடங்க இயலாது . ஏனெனில் இங்கு எல்லாமே Just  forward msg மட்டுமே !


முன்பெல்லாம் ஒரு மாணவனின் வெற்றி , தோல்வி என்பது அந்த ஆசிரியருக்கே சொந்தம் .ஏனெனில் ஆசிரியர் தான் பாட திட்டங்களையே வகுப்பாராம் .அந்ததந்த சமூகத்திற்கு தேவையான கல்வியை ,அந்தந்த மண்ணிற்கு ஏற்ற கல்வியை அவரவரே தயாரித்து இருக்கிறார்கள் . எல்லா சமூகத்திலும் வாத்தியார் என்றொருவர் உண்டு . அவர் அந்த சமூகம் சார்ந்த பாடங்களை நடத்துவார் . அவர் குஸ்தி வாத்தியார் , குத்து வாத்தியார் , வாத்தியார் என்ற பெயரில் இருப்பார்கள் .

இன்று தான் நாம் , யாரோ ஒருவரின் பாட திட்டத்தை துரத்தி கொண்டு இருக்கிறோம் . 

எல்லா சமூகத்திலும் , வைத்தியம் என்ற ஒன்றில் இருந்து தான் கல்வி ஆரம்பம் ஆகிறது .


எந்த கல்வியானது உடலியல் கூறு மற்றும் அது சார்ந்த மருந்தொடு ஆரம்பிக்கவில்லையோ ,அது நமக்கான கல்வியே அல்ல !


மரபு வேளாண் தொழில் செய்து பழகு !

தமிழ் மருத்துவம் செய்து பழகு !

தொழில்நுட்ப அறிவையும் பழகு !  

இவையே நவீன வாழ்வியல் ஆதாரங்கள் !



No comments:

Post a Comment

வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...