உற்பத்தியும் வளர்ச்சியும்
நம் மண்ணில் ,நவீன அறிவியல் கல்வி என்பது , பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வில்லை.கழிவு இல்லாத ,மாசு இல்லாத அறிவியலாகவும் இல்லை .குறைந்த பட்சம் அதை படித்தவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிலையில் கூட இல்லை .பெரும்பாலும் பொறியியல் வரை படித்து விட்டு பலரும் அரசு தேர்வும் ,வங்கி தேர்வும் எழுதி கொண்டு இருக்கிறார்கள் .இந்த தேர்வுகளை எழுத எதற்கு அவ்வளவு வரை படிக்க வேண்டும் ? பெற்றோரின் உழைப்பை உரிந்து கல்வி நிறுவனங்களை வளர்த்து விடவா ?
இந்தியாவில் இன்று அதிக அளவில் நடைபெறும் ஒரே ஒரு துறை சேவை துறை .
நாம் விவசாய துறையில் பின்தங்கி சென்று கொண்டு இருக்கிறோம்.
தொழில் துறை வளர வேண்டும் என்று கூறி கூறி தான் வேளாண் துறையை பின்னுக்கு தள்ளினோம் .ஆனால் தொழில் துறையும் ஒரு சில பணக்கார மனிதர்களை உருவாக்கி விட்டு ,மண்ணையும் ,இங்குள்ள வளங்களையும் அழித்துள்ளதே தவிர அதுவும் பெரிய அளவில் கணக்கில் இல்லை .
ஆனால் சேவை துறை வளர்ந்து வருகிறது .
இதற்கு எதற்கு ஆய்வு கல்விகள் ?
இதற்கு எதற்கு அறிவியல் கல்விகள் ?
இதற்கு எதற்கு இவ்வளவு பல்கலைக்கழகங்கள் ?
தொழில் துறை காட்டிய காரணம் போலவே , வேளாண்மைக்கு போனால் மீண்டும் அடிமையாகி விடுவான் .அதற்கு தான் கல்வி என்றெல்லாம் கூறினால் ,நாம் சேவை துறையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் மனநிலையை அடையவில்லை என்றே பொருள் தரும் .
ஒரு நாட்டில் உற்பத்தி பெருகினால் தான் அது வளர்ச்சி !
சேவை துறை பெருகினால் வேறு யாரோ வளர்க்கிறார்கள் என்றே பொருள் !
நம் மண்ணிற்கான கல்வி வராமல் , மேற்கத்திய கல்வியை வைத்து கொண்டு இங்கு என்ன மாற்றம் நிகழ முடியும்
மாற்றம் கல்வியில் இருந்தே தொடங்க வேண்டும் .
1990 களில் , இந்தியாவின் தனிநபர் வாங்கும் திறன் சீனா வை விட அதிகம் .சீனாவின் தனிநபர் வாங்கும் திறன் 990 டாலர் .இந்தியாவில் தனிநபர் வாங்கும் திறன் 1190 டாலர்.
ஆனால் இன்று ,
சீனாவின் வாங்கும் திறன் 16790 டாலர்
இந்தியாவின் தனிநபர் வாங்கும் திறன் 6920 டாலர்
நமக்கு கீழ் இருந்த சீனா இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக வளர்ந்து விட்டது .ஒரே காரணம் அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள் .நாம் சேவை செய்கிறோம் .
நம் நாட்டில் சீனாவை போல் மூன்று மடங்கு பள்ளிகள் அதிகம் .
ஆனால் கல்வியின் தரம் என்ன ?
உற்பத்திக்கான கல்வியை தான் இங்கு வழங்குகிறார்களா ?
என்ன தொழில் கல்வி , அடிப்படை கல்வியிலே வழங்கப்படுகிறது என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது .
உற்பத்தியம் ,உற்பத்தி சார்ந்து ,கழிவு தராத அறிவியல் கல்வியும் தான் , ஒரு நாட்டின் அடிப்படை ஆதாரங்களாக இருக்க முடியும் .
எப்போதும் யாரோ ,எந்த நாட்டில் இருந்தோ இங்கு வந்து தொழில் தொடங்குவதும் ,அதில் இங்கு உள்ளவர்கள் வேலை பார்ப்பதும் தான் கல்வி தரும் மாற்றமா ?
காங்கிரஸ் இருந்தால் ,பிஜேபி இருந்தால் என்றெல்லாம் கட்சி சார்ந்து ஒரு நாட்டின் கல்வியும் ,உற்பத்தியும் ,வளர்ச்சியும்,மனித வள ஆரோக்கியமும் இருக்கும் என்று எண்ணினால் ,நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம் என்றே அர்த்தம் !
அடடே அர்த்தம் என்பது சம்ஸ்கிருத சொல் என்று கூறி கொண்டால் அதன் பெயர் மாற்றம் அல்ல .
கழிவு இல்லாத அறிவியல் , அதனால் வரும் உற்பத்தி ,கழிவு இல்லாத மருத்துவம் இதற்கு வழி தேடினால் தான் மாற்றம் !
https://statisticstimes.com/economy/country/india-gdp-sectorwise.php
https://datacommons.org/place/country/CHN?utm_medium=explore&mprop=amount&popt=EconomicActivity&cpv=activitySource%2CGrossNationalIncome&hl=en
No comments:
Post a Comment